________________
களம் சிதம்பரம் மாநாடு போராட்டப் பொன்னேடாக மாறி யது கண்டு திராவிடத் தரணி பூரிப்பில் ஆழ்ந்தது. நானும், சத்தியும், முத்துவும், திருவாரூர் நண்பர்கள் விசயராகவன், தென்னன், தியாகராசன் ஆகியோரும் தஞ்சைக்கு வந்து சேர்ந்தோம். கல்லக்குடி போராட்ட நிதிக்காக தஞ்சையிலே 'பரப்பிரம்மம்' நாடகம் ஜூலை 7ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருச்சி மாவட்டத்திலே நடைபெறும் போராட்டம்- திருச்சி மாவட்டக் கழகம் பொறுப்பேற்று நடத்தும் போராட்டம் - அதற்கு தஞ்சை மாவட்டத்திலா நிதிவசூல் என்கிறீர்களா! - அப்படிப் பார்த்தால் திருச்சி போராட் டத்திற்கு தலைமையேற்று நடத்துபவனே தஞ்சை மாவட் டத்துக்காரன் தானே ! தஞ்சைத் தரணியும் - திருச்சி பூமியும் காதலன் காதலி போல! தஞ்சையிலே வீசிய புயல்கூட திருச்சியை யும் எட்டிவிட்டுத்தானே சென்றது! அவ்வளவு தொடர் புடைய தஞ்சையிலே நாடகத்தை நடத்தும் பொறுப்பை தோழர் N.S. சண்முகவடிவேலும் - தஞ்சை தி. மு. கழகத் தோழர்களும்-ராசகோபால் போன்ற நண்பர்களும் ஏற் றுக்கொண்டனர். தோழர் சண்முகவடிவேல் எடுத்த காரியத்தை இனிது முடிக்கும் இயல்புடையவர் -எதையும் முடியாது