பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

66 கருணாநிதி சந்திரனுக்குத் தாவ என்று என்னிடம் கூறமாட்டார் வேண்டுமா -சூரியனைப் பிடிக்கவேண்டுமா - இதுபோன்ற கடினமான காரியங்கள்கூட அவருக்குச் சிறு கடுகு! நான் சொன்னால்!! பொன் குணமும், புன்னகையும், தோழமை யில் களங்கமற்ற தன்மையும் கொண்ட சண்முகவடிவேலை என்னால் மறக்கவே முடியாது. மறைந்த வீரர் டி. என். இராமனின் குடும்ப நிதிக்காக தஞ்சையிலே 'பரப்பிரம்மம்' நாடகம் நடத்தினோம். அங் குள்ள அந்த சிறிய தியேட்டரிலே இரண்டாயிரம் ரூபாய் மீதப்படுத்தி இராமன் குடும்ப நிதிக்குத் தந்திடும் வாய்ப்பை, வெகு பொறுப்புடன் உண்டாக்கித் தந்தார். முன்போல - அவர் முழுநேரம் கட்சிப் பணிக்கு செலவிட் டால் இன்னும் மகிழ்வேன் நான். தஞ்சையிலே 'தூக்குமேடை' நாடகம் நடத்தப்பட்ட காலத்திலே எனக்கு அறிமுகமானவர் தோழர் இராச கோபால். இயக்க ஆர்வத்தின் காரணமாக சில இடையூறு களுக்காளாகி ஆனால் எந்த நேரத்திலும் என்பால் கொண்ட அன்புக்கு குறைவு வராமலும், இயக்க வளர்ச் சிக்கு உழைத்திடும் நெஞ்சுடனும், உலவுகிறவர் அவர். தஞ்சையிலே, பதி, பட்டு, பெத்தண்ணன், சோமு, பஞ்சாபிகேசன், நடராசன் முதலிய இயக்கத் தோழர்கள் கழகத்தின் தூண்களாக அமைந்திருக்கின்றனர். - நாடகத்திற்கு மறுநாள் ஜூலை 8ல் தஞ்சை பொதுக் கூட்டம். மக்கள் வெள்ளத்திடையே தில்லையிலே அண்ணா கொட்டிய முரசின் எதிரொலியாக இருந்தது. நானும்,மணி,அம்பில் முதலிய தோழர்களும் பேசினோம்.