________________
ஆறுமாதக் கடுங்காவல் 67 ஜூலை 8 ஒரு சிறப்பான நாள். புதிய கல்வித் திட்டத்தைக் கண்டித்து சட்டசபையிலே குரலெழுப்ப வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழக ஆதரவு பெற்ற சட்டசபை உறுப்பினர்களிடம் கழகத்தின் சார் பாக ஊர்வலம் நடத்தி மகஜர்' சமர்ப்பிக்கப்பட்டது, அந்த நாளில் தான். 6 அந்த முறைகூட தவறு என்று கூறிடும் விதத்திலே- இந்த நீதிவாய்ந்த அரசாங்கம் - சென்னையிலே மகஜர் அளிப்பதற்காக ஊர்வலம் நடத்திய விருதுநகர் வீரர் - தோழர் ஆசைத்தம்பி சென்னை மாவட்ட செயலாளர் கண்ணபிரான் - அலமேலு அம்மையார் ஆகியோர். உள் ளிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட தோழர்களை கைது செய் ப து தண்டித்தது. கருணைமிக்க ஆட்சியின் அடக்குமுறை அவிழ்த்து விடப்பட்டு ஒத்திகை பார்த்த நாள் ஜூலை 8 என்று கூறலாம். தஞ்சைக் கூட்டத்தை முடித்துவிட்டு கல்லக்குடிக் குச் சென்றோம் - களத்தை முன்கூட்டியே பார்வையிடு வதற்காக! கல்லக்குடி கழகத்தின் செயலாளரும், போராட்ட செயற்குழு உறுப்பினர்களில் ஒருவருமான தோழர் தம்பு சாமி எங்களை வரவேற்றார். தொண்டர்கள் தங்குவதற் கான பாசறை அமைக்க கல்லக்குடியிலே ஒரு இடம் தேடினோம். நாலைந்துபேர்கூட தங்குவதற்கு முடியாத சிறுசிறு குடிசை வீடுகள் தான் எங்களுக்குக் காட்டப்பட்டன.