பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

70 கரு கல்லக் இரண்டாயிரம் திராவிடத் தொழிலாளர்களின் வியர்வை சிந்தப்பட்டு - அந்த வியர்வையிலே குடியின் மண் கலக்கப்பட்டு - அந்த ரத்தச் சேற்றை அந்தப் பாட்டாளிகளின் சூடான பெருமூச்சாலேயே உலரவைத்து - சிமண்டு செய்து அதை திராவிடத்தின் வாணிபத் தெருவிலேயே வெள்ளிப் பணமாக்கி - அந்த வெள்ளிப் பணத்தைக் கொண்டே ஒரு ஏகாதி பத்தியத்தை ஏற்பாடு செய்து கொண்டு எகத்தாளம் போடுகிறான் இருதயமிழந்த வட நாட்டான். கல்லக்குடி, தொழில் வளம் தரும் செழிப்பான நிலம். அந்த நிலத்துக்குடையோர் நித்திய தரித்தி சர். குனிந்து செல்லவும் முடியாத குடிசைகள் அவர் மாளிகை. அவர்கள் அண்ணாந்து பார்த்து பெருமூச்செறியும் அவ்வளவு உயரமான வடநாட்டு களின் ஆலை! நிலை ! ஆலையிலே புகை-அதிலே தமிழர் மானம் போகும் 1938ல் அந்த மண்ணிலே காலெடுத்து வைத்த வடநாட்டு முதலாளிதான் டால்மியா. தனக்குச் சொந் தமாக ஒரு இடத்தை வாங்கி அதிலே டால்மியா தொழிற்சாலையை அமைத்தார். தனக்குச் சொந்த மில்லாத ஒரு இடத்திலே அமைந்த புகைவண்டி நிலை யத்திற்கும் தன் பெயரை சூட்டிட ஏற்பாடு செய்தார். வெள்ளைக்காரனுக்கும் வடநாட்டு முதலாளிக்கும் ஏகபோக சுரண்டல் கூடமாக இருந்த திராவிடநாடு வெள்ளைக்காரன் அந்த உறிஞ்சும் கூட்டுறவிலிருந்து விலகி தன் நாட்டிற்கு சென்றுவிட்ட பிறகு வட நாட்