பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

64 ஆறுமாதக் கடுங்காவல் 71 டானின் நிரந்தரமான சுரண்டல் பூமியாக ஆக்கப்படு வதற்கான சூழ்நிலை தினம் தினம் பலமடைந்து வரு கின்றது. அதற்கு ஒரு உதாரணம் டால்மியாபுரம் ! வீட்டிலே நுழைந்த திருடன் தூங்கும்போது கொள்ளையடித்தது மில்லாமல் - பொருள்களை மூட்டை கட்ட தூங்கியவன் தொடையிலேயே கயிறு திரிப்பது போல - நமது மண்ணைச் சுரண்டிக் கொழுக்கும் வட நாட்டினர் - இந்த மண்ணிலே தங்கள் பெயரையும் பொறித்திடத் துணிந்துவிட்டனர். பொருளைத்தான் கொடுத்தோம் - போற்றி வளர்க் கும் மானத்தையும் கொடுத்துவிட வேண்டுமாம் ஆமாம், கொடுக்கத்தான் வேண்டும்" என் று அகங் காரமாக நின்றுகொண்டிருக்கிறது - கல்லக்குடியிலே 'டால்மியாபுரம் ஸ்டேஷன்." 64 புகைவண்டி நிலையத்தை சுற்றிப்பார்த்தோம். ஏராள மான தொழிலாள நண்பர்களும் - கல்லக்குடி பெரியவர் களும்- இளைஞர்களும் -மாணவர்களும் எங்களை வந்து சந்தித்து, போராட்டத்தைப் பற்றிய செய்திகளை ஆவ லோடு விசாரித்தனர். சில மாதங்களுக்கு முன்பு கல்லக்குடியில் ஏற்பட்ட தீ விபத்தால் சில குடிசைகள் நாசமாகி மக்கள் அவ திக் குள்ளாயினர். அவர்களுக்கு நிவாரணம் அளிப்ப தற்காக நானும்,புரட்சி நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களும் தலைமை வகித்து நாடகம் ஒன்று நடத் தப்பட்டு நிதியொன்று அளிக்கப்பட்டது.