________________
ஆறுமாதக் கடுங்காவல் · 73 எளிமையான வாழ்க்கை முறையும் யாதும் ஊரே என்ற வாழ்க்கைத் தத்துவமும் - சிறியோரானாலும் சிறப் புடையோரை பெரிதும் மதித்திடும் சீரிய பண்பாடும் - பெரியோராயினும் பிழை புரிந்தோரை தூசெனக் கருதும் உள்ளமும் இயக்கத்திற்காக ஓடிஓடி, கோடி கோடி செயல்கள் புரியவேண்டுமென்ற ஆசையும் - ஆனால் அதற் குத் தடையாக எதிர் நிற்கும் தள்ளாத கிழப் பருவமும் கொண்ட லிங்கம் அண்ணா தன்னுடைய பல ஆண்டு காலப் பொதுவாழ்வில் அன்றுதான் ஒரு மாநாட்டிற்குத் தலைமையேற்கும் வாய்ப்பு பெற்றார். அந்த மகிழ்ச்சியான செய்திகேட்டு சென்னை பூரிப் படைந்தது. அவரை இருட்டுக்குள் தள்ளிவைத்திருந்த பெரிய மனிதர்கள் இப்போது வயிறு எரிந்திருப்பார்கள். லிங்கம் - ஒளிப்புறத்திற்கு வந்தார். இளைஞர்கட்கும். ஒளிப்பாதையைக் காட்டினார். 11ம் தேதி இரவு மாநாட்டில் 'பரப்பிரம்மம்' நாடகம். நாடகத்தை முடித்துவிட்டு நானும்,நண்பர்களும் உடனே திருச்சிக்குப் புறப்பட்டோம், 12ந் தேதி திருச்சி மாவட்ட செயற்குழுவில் கலந்துகொள்வதற்காக! 12ந் தேதி காலை சென்னையிலே - தாயிடமும்- சேய் களிடமும்- துணைவியிடமும் விடைபெற்று - கல்லக்குடி களம் செல்கிறேன்! நான் வந்து உங்களைப் பார்ப்பேனோ- அல்லது நீங்கள் வந்து என்னைப் பார்ப்பீர்களோ -தெரி யாது" என்று கூறிவிட்டு திருச்சியை நோக்கினேன். பிற்பகல் இரண்டு மணிக்கு திருச்சி வந்தடைந்தோம். மாவட்ட செயல்வீரர்கள் அனைவரும் வந்திருந்தனர். அவர்