________________
74 கருணாநிதி களிடத்திலே போராட்டம்பற்றி கலந்து பேசியபிறகு- இப்போதுள்ள செயற்குழு, அடக்குமுறைக்கு ஆளானால் அடுத்து வேலை செய்ய ஒரு செயற்குழுவைத் தேர்ந்தெடுத் தோம். அது, மற்றொரு செயற்குழுவை அமைத்துக் கொள்ளலாம் என்கிற அதிகாரமும் அந்தக் குழுவிற்கு அளிக்கப்பட்டது. இப்படி அமைப்பு முறையோடு போராட்ட திட்டங்களும், செயற்குழுக்களும் தோற்றுவிக் கப்பட்டன. 14ம் நாள் காலையில் திருவாரூர் சென்றேன்; அங் கிருந்து விடைபெற்று லால்குடி பொதுக்கூட்டத்திற்குப் புறப்பட்டேன். 13ம் நாள் எங்கிருந்தேன் என்று சொல்ல முடியாது. போர்முனையிலே தான் போலீசாரிடம் சிக்க வேண்டும் என்ற ஆசையினால் தூண்டிவிடப்பட்டேன் அதனால் தான்! போலீசார் என்னைத் தேடி நான் ஓடிவிட வில்லை. அதுபோன்ற இயக்கமுமல்ல நாம் சார்ந்திருப் பது! நாமே சென்று அடைபடுவானேன் - களத்திலே நம் கடமையை நாம் செய்வோம் - போலீசார் கடமையை அவர் கள் செய்யட்டும் - என்ற கருத்துடனே மருத்துவ மனை யில் நண்பர் பராவிடம் அன்பு விடை பெற்றுக்கொண்டு, நேராக லால்குடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு சென்றேன். செல்லும் பாதையிலேயே - பொதுச்செயலா ளர் அண்ணா, நெடுஞ்செழியன், சம்பத், மதியழகன், நட ராசன் ஆகிய செயற்குழுவினரை செயற்குழு கூட்டத்தில் போலீசார் கை கது செய்துவிட்டனர் என்ற செய்தி கிடைத் தது. கல்லக்குடி எனக்குக் களமாகத் தெரியவில்லை. திரா விடமே ஒரு போர்க்களமாகக் காட்சியளிப்பதுபோல் தெரிந்தது. திராவிட முன்னேற்றக் கழக ஆதரவு பெற்ற