பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 75 சட்டசபை உறுப்பினர்களும் மற்றவர்களும் சுமார் நூறு போ அண்ணா முதலியோரை கைது செய்ததைக் கண் டித்து சட்டசபையிலிருந்து வெளியேறினார்கள் என்ற செய்தியும் திராவிடத்தை உற்சாகப்படுத்திற்று. நாள் ! லால்குடியை அடைந்தோம் ஜூலை 14-ம் மறுநாள் காலையிலே ஜூலை 15! ஆம் சூளுரைக்கும் ஜூலை 15! 'முரசொலி கேட்குது; முன்னணி அமையுது!" என்று மூவேந்தர் பரம்பரையை அழைத்த ஜூலை 15! இழிவு துடைக்க வாரீர்! இன உணர்ச்சி கொள்வீர்! வஞ்சக வடநாட்டிற்குத் தென்னாட்டில் ஆதிக்கமாம்; நெஞ்சழுத்தம் பாரீர்! நேற்று மூவேந்தர் - இன்று டில்லி- நாளை நாம் - என்ற உறுதிப் படையெடுப்போம் - இறுதி திர்ப்போம் கல்லக்குடியில் முதல் களம் அமைப் போம் - உயிர் வெல்லமென்போர் விபீஷணர் - அவர் வில கட்டும்! புறப்படுவோம் போர்முனைக்கு! புறநானூறு நமது கையில்! பழந்தமிழர் வரலாறு நமது நெஞ்சில்! எதிரே பகைவர்! இளித்து நிற்கும் 'டால்மியாபுரம்' என்ற பெயர்! திராவிடமே உனது தீர்ப்பை வழங்கு! என்று பரணி பாடியபடி படை கிளம்பிய ஜூலை 15. வரை எ - பகை தகர்ப்போம் - நகை உதிர்ப்போம், வென்றோ மென்று ! என வீர முரசு கொட்டிய ஜூலை 15! திராவிடா! வடநாட்டில் உன் நாட்டுக்குப் பெருமை கிடையாது. உனது தலைவர்களுக்கு ஞாபக மண்டபம் கிடையாது. ஆனால்; இழிவு நிரைந்தவனே! இந்த நாட்டில் வட நாட்டானுக்குப் பூரணகும்பம், பூரிப்பான வாழ்வு, உல்லா