________________
ஆறுமாதக் கடுங்காவல் 77. கூட்டம் சிறப்புடன் முடிவுற்றது. அன்றிரவே எல் லோரும் கல்லக்குடிக்குப் புறப்பட்டோம். பொதுச்செயலாளர் அண்ணாவைப் பூட்டிவிட்ட காரணத்தால் போராட்டம் புகைந்து போய்விடும் என்று ஆட்சியாளர் கருதினர். புகைவண்டிகள் நிற்காமல் ஓடும் என்று உறுதியாக நம்பினர், ஆச்சாரியார் வீட்டு மறிய லுக்கு யாரும் வரவே மாட்டார்கள் என்று தப்புக்கணக் குப் போட்டனர். கல்லக்குடியிலே எட்டிப் பார்ப்பதற்குக் கூட ஆள் இருக்கமாட்டார்கள் என்று கனவு களிப்படைந்தனர். கண்டு அமைதி அமைதி!" என்று முழங்கிக்கொண்டிருந்த் அண்ணாவை சிறையில் பிடித்துப்போடுவதற்கு இவர் களுக்கு எந்த நியாயம் இடம் கொடுத்ததோ தெரிய வில்லை. அவரைப் பிடித்து அடைத்துவிட்டால் அறப் போர் அடங்கிவிடும் என்று எந்த ஆரூடக்காரன் சொன் னானோ தெரியவில்லை! அண்ணா சிறையில்! ஆனால் அவர் தந்த உ உரைகள் - போராட்ட முறைகள் - பொன்னிகர் மொழிகள் - வெளியில் - ஆயிரமாயிரம் உள்ளத்திலே குடி யேற்றிவிட்டவை என்பதை உணரவில்லை -ஊராள வந்தவர்! அதை உணரச்செய்கிறோம் என்று குருதி கொதித் தவர்கள் காத்துக் கிடந்தார்கள். கல்லக்குடியிலே இரவு இரண்டு மணிக்கு தொண்டர் கள்ஃபாசறையிலே அறப்போர் வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. போராட்டத்திற்கு பதிவு செய்யப்பட்டு முதல் இரண்டு நாள் போரிலே கலந்துகொள்ளவேண்டிய