________________
78 கருணாநிதி பு ச இடம் வர்கள் 14ம் தேதி இரவே வரவேண்டுமென்று அழைப்பு அனுப்பப்பட்டவர்கள் எல்லாம் - அந்த அழை சீட்டை அடையாளமாகக்கொண்டு பாசறையில் பெற்றார்கள். 15ம் தேதி போருக்கான வீரர்களை மூன்று பகுதி களாகப் பிரிக்கப்பட்டது. முதல்படை - இரண்டாம்படை - மூன்றாம்படை. ஒவ் வொரு படைக்கும் இருபத்தைந்து வீரர்கள். முதல் உக்கு நான் தலைவன். இரண்டாம் படைக்கும் மூன்றாம் படைக்கும் முறையே காரைக்குடி தோழர் ராமசுப்பையா- தோழர் கண்ணதாசன் ஆகியோர் தலைவர்கள். படைக போராட்டத்தில் எப்படியெப்படி அமைதியோடும் கண்ணியத்தோடும் - கட்டுப்பாட்டோடும் நடந்துகொள்ள வேண்டுமென்று தொண்டர்களுக்கு பயிற்சியளிக்கப்பட் டது. நல்ல இரவு. திராவிடத்தை இருள் கவ்விக் கொண் டது போலவே வையகத்தையும் இருள் கப்பிக்கொண்டி ருந்தது. அந்த இரவில் யாருக்குமே தூக்கம் வரவில்லை. மறுநாள் காலையில் நடைபெறப்போகும் போராட்டத் தைப்பற்றிக் கற்பனைகள் செய்துகொண்டிருந்தோம். போர் நிகழ்ச்சிகளில் உடனிருந்து உதவுவதற்காக தஞ்சையிலிருந்து தாமரைச்செல்வன் வந்திருந்தார். தாமரைச்செல்வன் என்ற தமிழ்ப் பெயரிலே -புனைப் பெயரிலே - உலவும் தோழரை நீங்கள் அறிவீர்கள். பேச் சிலே தென்றலும், எழுத்தில அருவியோட்டமும் கொண்ட நண்பர் தாமரைச்செல்வன், நெருக்கடியான