பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

80 O க ணாநிதி மகதமும், அவந்தியும் மணி மண்டபங்களை - தோரண வாயில்களை முத்துப்பந்தர்களை எங்கள் கரிகாலன் எனும் திருமாவளவன் காலிலே வைத்து காணிக்கை செலுத்தி - கைகட்டி நின்ற காலமொன்றிருந்தது! அந்த வடநாடு இன்று கரிகாலன் பரம்பரையை இகழ்ந்து பேசு கிறது! இமயத்தின் நெற்றியிலே புலிக்கொடி! இது தமிழர் ஏடு ! அதிலே மண்மேடு குவிய மதோன்மத்தர் கள் முயல்வது- நாமும் பழைய பண்பாடு மறப்பது! நியாயமா மாநிலமே! மறவர் மண்ணே! மாசற்ற பூமியே! கண்ணீரும் - கனலும் சேர்ந்து கிளம்பும் விழியுடை வீரர்கள் எழுந்தனர்! எழுந்தனர்! பறந்தனர்- பறந்தனர். படை முகாம்களுக்கு! B கூடியவரை வீரர்களின் அடிச்சுவடுகளை சூழ்ச்சிக்காரர்கள் அழித்துவிட்டிருக்கலாம்; ஆனால் காலம் யில் அவைகளைக் காப்பாற்றித்தான் வைத்திருக்கிறது. அதையும் ஒழித்துக்கட்ட முயலும், ஒண்டவந்த பிடாரி கள் - அவர்களுக்கு சாமரம் வீசும் தமிழ்நாட்டு ஒதிய மிலார்கள் - ஒழிந்திடுக ! ஒழிந்திடுக! என உயர்ந்திட்டது. போராட்டக் கொடி! Ꭲ சிவப்பும் கருப்பும் கலந்த கொடி-இழிவுதனைக் காட் டிக் கொண்டோம். இருள் நிறைந்த திராவிடமே! பழி தீர்த்துக்கொள்ளத்தானே பச்சை ரத்தம் பாய்ச்சிடு வோம் - என்று பறைசாற்றிடும் கொடி! உயர்ந்தது உயர்ந்தது! தமிழ்நாட்டுத் தெருவெல்லாம் நிறைந்தது!- கல்லக்குடியிலே -டால்மியா தொழிற்சாலையிலே கிளம்பிற்று. புரட்சி எரிமலையிலும் புகை எ எழும்பிற்று! து! புகை