________________
· ஆறுமாதக் கடுங்காவல் 81 ய அந்நிய ஏகாதிபத்தியத்தின் ஆணவத்தை-அதிகா ரக் கொழுப்பை எதிர்த்திட திராவிடம் கொடி தூக்கிய நாள் - கொடுமையைக் களைந்திட வரிந்துகட்டிய நாள் குள்ளநரிக்குணம் படைத்தோர் கொட்டம் அடங்கிடக் கொக்கரித்த நாள் - மூவேந்தர் மரபு மீ ண்டும் முரசு கொட்டிய முதல் நாள் - ஜூலை 15ம் நாள் மலர்ந்தது!- மலர்ந்தது! ஆட்சிக்காரர் நெஞ்சிலே எஞ்சியிருந்த இரக்க மும் உலர்ந்தது! உலர்ந்தது!- ஆனாலும் அவர்கள் பிடி 'தளர்ந்தது! ஆணவத்தின் தலையிலே இடி விழுந்தது!- - ஆயிரக்கணக்கான மக்கள், களங் காண வந்துவிட் டனர், கல்லக்குடிக்கு! தொண்டர் பாசறையிலே முதல் முரசு ஒலித்தது! முதல் படை கிளம்பியது! கள் 6 நான் முன்னே என் பின்னே இருபத்திநாலு வீரர் எம்மைச் சுற்றி ஆயிர மாயிரம் தோழர்கள் - திரா விடத் தாயின் தலையிலே வடநாட்டான் சூட்டிய அவமானக் கிரீடம். அதைக் கழற்றி குப்பைமேட்டில் எறிய முடியாத படி தாயின் கரங்களில் விலங்கு. அந்த விலங்கொடிக்கும் விடுதலைப்பட்டாளம் முதல் படை - கல்லக்குடியிலே நடைபோட்டது. கிளம்பிற்றுக்காண் தமிழர் சிங்கக் கூட்டம் கிழித்தெறியத்தேடுதுகாண் பகைக் கூட் டத்தை' என்றிடும் விதத்திலே - இந்நாட்டான் இங்கு வாழ்வான் தமிழ்நாட்டான் தலை குனிந்தான் - இதோ நிமிர்ந்தான் ! விழித்துவிட்ட காட்சியைப் பார் - இனிக் கொழித்துவிட்ட உமிகள்தான் கொடுங்கோன்மைக் கூட் டத்தார்! என்றிடும் விதத்திலே -புழுதி யெழுப்பியவாறு போர்ப்படை களம் நோக்கி விரைந்தது!- நடந்தனர் வீரர்கள்! பல தெருக்களைக் கடந்தனர் தீரர்கள்! குருடர் களும் பார்த்தனர் - கூனர்களும் நிமிர்ந்தனர்!