பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

82 கருணாநிதி “அடைந்தே தீருவோம் அருமைமிகு திராவிடத்தை!” "புலிவாழ் நாட்டில் எலிபுகு காவியமா?” “தமிழர் வீட்டில் வடவர் மொழியா?" "எங்கள் மண்ணில் அயலான் பெயரா?" முழங்கினர்! முரசு கொட்டினர்! முன்னேறினர் ! செவிடர்களும் கேட்டனர்! ஊமைகளும் களம் வந்தது செந்தமிழன்னையின் வாழ்த்தினர்! கண்களைக் குத்தியிருக்கும் இடம் வந்தது - பெருமைக்குரிய தாய்- புலம்பிக்கொண்டிருந்த இடம் வந்தது-வடநாட்டு ஆதிக் கம் திராவிடர் நெஞ்சிலே ஈட்டியால் குத்திக்கொண்டிருக் கும் இழிவுநிறை இடம் வந்தது - தமிழரின் சொத்து சுருட் டப்படும் இடம் வந்தது- தமிழரின் வீரம் புதைக்கப்பட்ட சுடுகாடு வந்தது. பல்லை டால்மியாபுரம்" அந்த அவமானச் சின்னம், இளித்தபடி நின்றுகொண்டிருந்தது! அன்னையின் தலை யிலே அமுத்தப்பட்ட முள் கிரீடம்! திராவிடர் மானத்தை சித்திரவதை செய்ய அமைக்கப்பட்ட சிலுவை! அய்யோ! அந்தக் கிரீடத்தின் வழியாக எங்கள் பெற்ற தாயின் குருதி சொட்டிக்கொண்டிருந்தது! அய்யகோ! பிறந்த பொன் னாட்டின் உதிரம் வெள்ளம்போல் பெருக்கெடுத்தது அந்த சிலுவையின் வழியாக! எங்களைச் சீராட்டிப் பாராட்டி செந்தமிழையும் ஊட் டிய சிலம்பணிந்த செல்வி - மணிமேகலாதேவி - மாணிக்க