பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 89 அவர்கள் வருமாறு; ராமசுப்பையா, ஜெயங்கொண் டம் வேணுகோபால், மலைக்கோட்டை செயல்வீரர்ரத்னம், அரியலூர் செயலாளர் எத்திராஜ், தமிழ் முத்து, முனு சாமி, மருதமுத்து, பாண்டியன், கலைமணி, முருகேசன், டி.ஏ.கமலன், பரமானந்தம், முருகேசன், ராமு, தங்க கவேல், சின்னையா, சத்தி, அனீப், இராவணன், நல்லமணியன், காளிதாஸ், சக்கரபாணி, சோமசுந்தரம், மருதநாயகம், வளர்மதி, முகமதலி, கிருஷ்ணமூர்த்தி, பாண்டு, ராமன், சின்ன துரை, நடராசன் ஆகியோர். போலீஸ் கூடத்திலே அனைவரும் அமர்ந்திருந்தோம். அந்த ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் எங்களைப் பாதுகாத் தபடி எங்கும் போகாமல் அங்கேயே அமர்ந்துவிட்டார். - முப்பத்தி ஒன்று என அவர்களை எண்ணி முடிப் பார் - பிறகு எங்களை எண்ணுவார் ! - மீண்டும் சந்தேகம் வரும் - மீண்டும் . எண்ணுவார் - ஒன்-டூ-த்ரீ - சொல்லுங் கள் என்பார் - சொல்லுவோம் - முப்பத்திஆறு முடியும் - யாராவது இரண்டு முறை சொல்லியிருந்தால் என்ன் செய்வது!" என்பார்!- “சரி எல்லோரும் கைதூக்குங் என்று கூறி கைகளை எண்ணுவார். கள் 33 " "யாராவது இரண்டுகையும் தூக்கியிருந்தால் என்ன எண்ண ஆரம்பிப்பார் அவரும் இப்படி எண்ணிக்கொண்டேயிருந்தார் - நாங் களும் எண்ணிக்கொண்டேயிருந்தோம்; ஆட்களை அல்ல ! ஆதிக்கக்காரர் அரசோச்சும் நாட்களை ! ஆவது என்பார் - மீண்டும் மூன்றாவது படை, நடுப்பகலில் - தோழர் கண்ண தாசன் தலைமையில் புறப்பட்டுச் செல்லும் ஒலி கேட்டது.