________________
90 கருணாநிதி 1949ம் ஆண்டு என் எறு நினைக்கிறேன்; சேலம் மாடர்ன் தியேட்டர்சுக்கு முதன் முதலாக சென்றிருக் கிறேன். இப்போது தமிழரசுக் கழக வாதியாக இருக்கிற தோழர் கா.மு.ஷெரீப் ஒரு நண்பரை எனக்கு அறிமுகப் படுத்திவைத்தார். அந்த நண்பர் நெற்றியிலே பட்டையாக திருநீறு பூசிக்கொண்டு என்னை அறிமுகப்படுத்திய தும் 'நமஸ்காரம்' என் று கைகூப்பினார். நான் கொஞ்சம் ழுத்தமாக வணக்கம் ' என் று சொன்னேன். அந்த நண்பர் செட்டிநாட்டைச் சேர்ந்தவரென்றும் கவித்துவ மும், சமய உணர்ச்சியிலே துடி துடிப்பும் வாய்ந்த வரென்று ஷெரீப் கூறினார். சேலத்தில் சில நாட்கள் நான் தங்கவேண்டியிருந் தமையால் அவரோடு பழக வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. நல்ல இளமையும், தமிழறிவும் சமயமெனும் சூளையிலே நடப்படுகிறதே என எண்ணினேன். அவரோடு அதிகமாகப் பழகிய பிறகு என்னைப் பார்க்காமலே அவர் என்னிடத்திலே கொண்டி ருந்த அன்பும், அவரைப் பார்த்த பிறகு அவரிடத்திலே எனக்கு ஏற்பட்ட அன்பும் - பாச உணர்ச்சியுள்ள நட்டிப் பயிருக்கு விதையாகிவிட்டன. பிரிந்தோம் - பிறகு கூடி னோம்-மீண்டும் பிரிந்தோம் - கூடினோம் - தகராறுகள் ஏற் பட்டு அல்ல! அவரவர்கட்கு இருந்த அலுவல்களால்! பொள்ளாச்சியிலே பொதுக்கூட்டம் ஒன்றுக்காக போய்க்கொண்டிருக்கிறேன். வழியிலே கோவையிலே அந்த நண்பரைச் சந்தித்தேன். எப்போது சந்தித்தா லும் அவருக்கும் எனக்கும் திராவிடர் இயக்கத்தைப் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் நடைபெறும். அறிஞர் அண்ணாவின் ஆற்றலைப் பாராட்டுவார். அவர்போல் ஒரு