பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 91 அறிஞரைக் காண முடியாதென புகழுவார். ஆனால் கழ கத்தின் கொள்கைகள் தான் கசக்கின்றன என்பார். கோவை சந்திப்பில் எங்கள் வாதம் ஒருவாறு முடிவுற்று- அவரும் என்னுடன் பொள்ளாச்சிக்கு வருவதாக ஒத்துக் கொண்டார். வழிநெடுக பஸ்ஸில் வாதம் நடத்தியபடி சென்றோம். கோவையிலே ஆரம்ப காலம் முதல் கட்சியை வளர்க்க அரும்பாடுபட்டவர்களில் மிக முக்கியமானவர் களில் ஒருவரான தோழர் ராசமாணிக்கமும் வாதங்களில் கலந்துகொண்டார். மானது. பொள்ளாச்சி சென்றோம். பொதுக்கூட்டம் ஆரம்ப பொள்ளாச்சி வாசியும் - கஷ்ட நஷ்டங்களுக் கிடையே கட்சிப் பணியாற்றுபவருமான கழகக் காளை ராமானுசம், கடமையுணர்ச்சிமிக்க நண்பர் ஆனைமலை மயில்சாமி, இருவரும் பேசினார்கள். நான் பேசுவதற்கு முன்பாக செட்டிநாட்டு நண்பர், தானும் பேசுகிறேன் என்றார். நான் சரியென்றேன். ஆனால் எனக்குப் பயக் தான். என்ன பேசிவிடுவாரோ; அதற்கு வேறு பதில் சொல்லவேண் டிய நிலைமை ஏ ற்பட்டுவிடுகி தா என்னமோ; அப்படிப் பதில் சொல்லி வீ ணான குழப்பம் ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது; ஏன் கோயமுத்தூ ரில் இருந்தவரை இங்கு அழைத்து வந்தோம் - என்றெல் லாம் எனக்குள்ளாகவே பேசிக்கொண்டேன். அவர் பேச எழுந்தார். உடனே அவர் நெற்றியை கவனித்தேன்! ‘அட பரமசிவம் அவர் நெற்றியிலே திடீரெனத் திரு நீறைக் காணோம்! பேசத்துவங்கினார். 66 "" "தலைவர் அவர்களே! முட்டாள் தனத்துக்கு முதலிடம் கொடுத்து - மடிந்துபோகும் ஏழைகளைப்பற்றிக் கவலைப் படாமல் இடிந்துபோன கோயில்களுக்கு கும்பாபிஷேகம்