________________
ஆறுமாதக் கடுங்காவல் 93 செட்டிநாட்டு நண்பரும் நாங்களும் - பிறகு - மிகவும் நெருங்கிவிட்டோம். கழகக் காரியங்கள் - சொந்த அலுவல் கள் - எல்லாவற்றிலும் அவரும் துணைபுரிபவரானார். - அவர் மிகவும் நல்லவர். திருநீறு பூசியிருந்தாரே- அப்போ துங்கூட! அதனால்தான் அவர் அவ்வளவு சீக் கிரம் நம் பாசறையை உணர முடிந்தது உழைப்பார் உணர்ச்சியோடு செயலாற்றுவார் - ஒரே குறை - எனக்கும் அவருக்கும் அடிக்கடி தகராறு உண்டாக்கும் குறை உணவு விஷயத்தில் அவருக்கு அவரே நிகர்! சிறைச் சாலைக்குப்போனால் என்னய்யா செய்வீர்; என்று கோப மாகக் கேட்பேன். அதற்குத்தான் தயார் படுத்து கிறேன்" என்பார்! "ஒட்டகம்போல தயார்படுத்த முடியாது தோழரே! ஒத்திகை பார்த்துக்கொள்ளவேண்டும் பட்டினி கிடந்து!' என்பேன்! ஆத்திரம் தாங்கமுடியாமல் இலையைத் தூக்கி விட்டெறிவார் -எச்சில் தொட்டியில் எல்லாம் சுத்தமாக சாப்பிட்டான பிறகு! உண வு விஷயத்தில் நல்ல பாடங்கற்பிக்க சமயம் பார்த்திருந்தேன். கிடைத்துவிட்டது சந்தர்ப்பம். ஆனால் அது நழுவிவிட்டது. ( இருந்தாலும் மீண்டும் கிடைக்கும்) கல்லக்குடி போராடத்தில் மூன்றாம் படை வரிசைக்கு தளபதியாகச் சென்று - போலீசாரின் முரட்டுத்தனமான தாக்குதலுக்கு ஆளான கண்ண தாசனைப் பற்றித்தான் இவ்வளவு தூரம் கூறுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியாமலா இருக்கும். ஜூலை 14ல் லால்குடி வந்தார்! மேடையில் பேசினார். 'குருவுக்கு வரும் துன்பம் சிஷ்யனை