பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


அமரர். கலைமணி. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் தமிழ் கூறும் நல்லுலகுக்கு நன்கு அறிமுகமானவர். அவரது தமிழ்ப்பணியும் கலைப்பணியும் தமிழக வரலாற்றில் புகழ் அத்தியாயங்கள் என்று ஓர் அன்பர் சொன்னார். முற்றிலும் உண்மை. தஞ்சாவூரில் அவர் உருவாக்கிய கலைக்கூடமும், தமிழ்மக்களுக்கு அவர் விட்டுச் சென்றிருக்கும் நூல்களுமே அதற்குச் சான்றுகளாகும். குற்றால முனிவர். ரசிகமணி டி.கே.சி.யின் பிரதம சீடரான அவர் ஆக்கித்தந்துள்ள இலக்கியப் படைப்புகளும், கலைப்படைப்புகளும் தமிழுக்கும், கலையுலகுக்கும் கிடைத்த அரிய பொக்கிஷங்கள்.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், ஐ.ஏ.எஸ்.
ஆசிரியரது பிற நூல்கள்
1. வேங்கடம் முதல் குமரி வரை (நான்கு பாகங்கள்) .
2. வேங்கடத்துக்கு அப்பால் .
3. இந்தியக் கலைச் செல்வம் (வானொலிக் கட்டுரைகள்)
4. கலைஞன் கண்ட கடவுள்
5. கல்லும் சொல்லாதோ கவி
6. அமர காதலர்
7. தென்றல் தந்த கவிதை
8. தென்னாட்டுக் கோயில்களும், தமிழர் பணபாடும்
9. பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்
10. தமிழறிஞர் வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார்
11. ரசிகமணி டி.கே.சி.