பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

பாஸ்கரத் தொண்டைமான்

படைக்கும் கடவுளாம் பிரமன் அகந்தையை அடக்கி, பிரணவத்தின் பொருள் என்ன என்று அவனுக்கு விளக்கிய நிலையை


சிட்டித் தொழில் அதனைச் செய்வது எங்ங்ன்
என்று முனம்
குட்டிச் சிறை இருத்தும் கோமானே -
மட்டவிழும்
பொன்னங் கடுக்கை புரிசடையோன் போற்றி
இசைப்ப
முன்னம் பிரமம் மொழிந்தோனே

என்று வாயாரப் பாடி மகிழ்கிறார். இதை எல்லாம் விட வள்ளியை மணந்த கதையை அவர் கூறுவதில் தான் எத்தனை அழகு!


கானக்குறவர் களிகூரப் பூங்குயில் போல் ஏனற்
புனங்காத்து இனிது இருந்து - மேன்மை பெறத்
தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த
வள்ளிக் கொடியை மணந்தோனே

என்று அந்த இள முருகனை விளிப்பதில்தான் எவ்வளவு உற்சாகம்! ஏதோ ஐந்து வயது பிள்ளையாயிருந்து பாடிய பாட்டாகவா தெரிகிறது. கலி வெண்பாவில் மாத்திரந்தானா இப்படிப் பாடுகிறார்? பிள்ளைத் தமிழில் செங்கீரைப் பருவத்தைப் பாடும்பொழுதும் கூட, இந்த வள்ளியை மணந்ததையே நினைக்கிறார். அந்த வள்ளியைப் பெற முருகன் போட்ட வேடங்களை யெல்லாம் நினைப்பூட்டுகிறார். இவைகளை எல்லாம் அழகு தமிழில் அன்பு ஒழுகப்படுகிறார்.


மருக்கோல நீலக் குழல்
தையலாட்கு அருமருந்தா
இருந்த தெய்வ
மகக்கோலமே, முதிர்
கிழக்கோலமாய்க் குற
மடந்தைமுன் நடந்து மன்றத்
திருக்கோலம் உடன்ஒரு
மணக்கோலம் ஆனவன்

என்று அறமுகப்படுததுவார் ஒரு தடவை. திரும்பவும்