பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

ஆறு செல்வங்கள்

"உணவு" என்பது வாயால் உண்பது. "உணர்வு” என்பது செவியால் பெறுவது. வள்ளுவர் இவ்விரண்டையும் மாற்றி அமைத்திருப்பது வியப்பிற்குறியதே. இதனைச் "செவிக்கு உணவு" என்பதாலும். "வாய் உணவின் மாக்கள்" என்பதாலும் நன்கறியலாம். இவை இவற்றின் உயர்வையும், இழிவையும் உணர்ந்து வந்தன போலும்.


செவிக்கு உணவு இல்லாதபோது தான் வயிற்றுக்குச் சிறிது உணவளிக்க வேண்டும் என்பது வள்ளுவர் நெறி. இதனால், கேள்விச் செல்வத்தைப் பெற வாய்ப்புள்ளபோது உண்பதைக்கூட ஒத்திவைக்க வேண்டும் என்றாகிறது.


"கேள்வி ஒரு செல்வம்" என்பதால், எதையும் எவரிடமும் கேட்டுவிடக்கூடாது. கேட்கும்போது "கேட்டுத்தான் ஆகவேண்டுமா?" என்று உன்னையே நீ ஒரு கேள்வி கேட்டுக் கொள். பிறகு யோசித்துக் கேள், அவனும் யோசித்துப் பதில் கூறுவதை மட்டுமே கேள். அதையும் குறைவாகவே கேள். சுருக்கமாகக் கேள், அதையும் மெதுவாகக் கேள் இதுவே கேள்விச் செல்வத்தைப் பெறும் சரியான வழி.


அறிவற்றவர்களிடம் எதையும் கேட்டுவிடாதே. அதனால் இரண்டு வகையான துன்பம் வரும். முதலாவது அவன் தவறாகவும் பதில் கூறிவிடுவான். இரண்டாவது அவன் தன்னைவிட உன்னை மட்டமானவன் என்றும் கருதிவிடுவான். ஆகவே, அறிவாளிகளிடம் மட்டுமே கேள். அதில் இலாபம் கிடைக்காமற் போய்விடினும், நட்டத்திற்கு வழியேயிராது.


ஓயாமற் கேள்வியைக் கேட்டுக் கொண்டிருப்பவன் ஓட்டை வாயன். - தேனவயற்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பவன் மூடன். இழிவான கேள்விகளைக்