பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ.பெ. விசுவநாதம் 25

ளாலே அவன்தாள் வணங்கி, 'அவனது திருவருளைப் பெற வேண்டும் அதற்கு அன்பு நெறியும் அருள் நெறியும் பெருந் துணை செய்யும்.

ஒருவன் பெற்றுள்ள செல்வங்கள் அனைத்தும் பெருகி வளர்ந்து, பயனுற்று, சிறப்புற்று விளங்க வேண்டுமானால், அவன் அருட்செல்வத்தையும் பெற்றிருக்க வேண்டும் இன்றேல் அவன் எத்தகைய செல்வத்தைப் பெற்றிருப்பினும் அவன் அதனால் பயன் பெறான். கோழையின் கைகளில் வாள் போய்ச் சேராது; சேர்ந்தாலும் கொடியவன் உள்ளத்தில் அருள் போய்ச் சேராது.

வாழ்ந்து பெறும் செல்வம் கிழட்டுச் செல்வம்; ஆழ்ந்து பெறும் செல்வம் சிந்தனைச் செல்வம். நடந்து பெறும். செல்வம் திருச்செல்வம். உழைத்துப்பெறும் செல்வம் உடற்செல்வம். முயன்று பெறும் செல்வம் பொருட் செல்வம். மகிழ்ந்து பெறும் செல்வம் மக்கட் செல்வம். வருந்திப் பெறும் செல்வம் கல்விச் செல்வம். பெற முடியாத செல்வம் தாய்ச் செல்வம். அருட் செல்வமோ உழைக்காமல் வருந்தாமல் நினைத்தே பெறுகின்ற பெருஞ்செல்வமாகும் இதனாலேயே 'இது செல்வத்துட் செல்வம்' எனப்பெறுகின்றது. ஆகவ்ே தம்பி நீ அருட் செல்வத்தை வழங்கி அருட் செல்வனாக விளங்கு!

வாடிய பயிரைக் கண்டு வாடிய உள்ளம் அன்றே தேடிய செல்வம் ஒன்று அதுதிரு அருளாம் செல்வம்

வாழட்டும் தமிழகம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/27&oldid=956421" இலிருந்து மீள்விக்கப்பட்டது