பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 ஆறு செல்வங்கள்

ஆனால் அறிவுச் செல்வமானது தன்னைத்தானே காப்பாற்றிக் கொண்டு தன்னைச் சார்ந்தவனையும் காத்து நிற்கும் ஒர் அருஞ்செல்வமாகும்.

பல செல்வங்கள் காலத்தால் அழியக்கூடியன; சில செல்வங்கள் பகைவரால் அழியக்கூடியன. இன்னும் சில செல்வங்கள் தானே அழிந்துவிடக் கூடியன ஆனால், அறிவுச் செல்வமோ எப்போதும் அழியாததும், எவராலும் அழிக்க முடியாததுமாகும்.

மனம் வேறு, அறிவு வேறு, "மனமே அறிவு' என மயங்குவர் சிலர். மனம் மயங்கும், அறிவு மயங்காது. மனம் கலங்கும், அறிவு கலங்காது. மனம் வாய்க்காலில் ஒடும் நீர், அறிவு அதன் இரு கரைகள். மனம் குதிரை அறிவு குதிரை யோட்டி. மனம் குதிக்கும், அறிவு அடக்கும். மனம் ஆசைப் படும். அறிவு அதைத் தடுக்கும், மன்-நினைவு, மனம்நினைப்பது, மனனம்-நினைத்துக் கொண்டேயிருப்பது. மனிதன்-மனத்தின் வழிச் செல்பவன் என்றாவான். அவ்வாறு செல்லாமல் அறிவு வழிச் செல்பவரே," "அறிஞர்' எனப்படுவர்.

அறிவை அறியாதவர் சிலர்; அறிந்தும் அதனை அடையாதவர் சிலர்; அடைந்தும் அதனை வளர்க்காதவர் சிலர்; வளர்த்தும் பயன்படுத்தாதவரோ பலர். இந்த நால் வகையினரையும் "அறிவிழந்தவர்' என அறிவைப் பெற்றவர் கூறுவர்.

அறிவை இழந்தவர் மானத்தையும் இழப்பர். அவரை 'உயிர் இழந்த உடல்' எனக்கூறலாம். கூறிப் பயன்? உயிரிழந்த உடல் அழிந்தொழிந்து போய்விடும். இது அழிந்து ஒழியாமல் அலைந்து திரிந்துகொண்டேயிருக்கும். உயிரிழந்த உடல் காடுகளிற் கிடந்தால் நாய் நரிகளுக் கேனும் உதவும். இது நாட்டின் நடுவிற் கிடந்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/38&oldid=956447" இலிருந்து மீள்விக்கப்பட்டது