பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ.பெ. விசுவநாதம் 37

யாருக்கும் எதற்கும் உதவாது; உயிரிழந்த உடலை அதன் உறவினர்கள் கண்டால் அதனை எரிந்தோ, புதைத்தோ அழுது வருந்துவர். ஆனால், இதன் உறவினர்களோ எரிக்காமலும், புதைக்காமலும், அழாமலும் பார்த்துக் கொண்டேயிருப்பர். அதிகம் கூறுவானேன், உயிரிழந்த உடலுக்கு, உற்ற நண்பர்கள் இருந்தால், மலர் மாலை யிட்டுப் போற்றுவர். ஆனால், இதற்கு உற்ற நண்பர்கள் இருந்தால் வெறுத்தே ஒதுக்கிவிடுவர். ஆகவே, அறிவிழந்த மக்களை 'உயிரிழந்த உடல்' எனக் கூறுவது ஒருபோதும் பொருந்தாது.

அறிவுடையவர்கள் எத்தகைய மக்களையும் நட்பாக்கிக் கொள்வார்கள். அது மட்டுமல்ல, பெற்ற அந்நட்பைக் குறைத்துக் கொள்ளாமலும், வளர்த்துக் கொள்ளாமலும், ஒரே மாதிரியாக வாழ்ந்து வருவர். அறிவிழந்த மக்களால் இது ஒருபோதும் இயலாது. -

அறிவுடையார் கண்ணாற் காண முடியாததையும் காண்பர். காதால் கேட்க முடியாததையும் கேட்பர். அது மட்டுமல்ல, பின்னால் என்ன வரும்? என்ன நேரிடும்? என்பதைக்கூட முன்கூட்டியே அறிவர். அறிவுச் செல்வத்தை இழந்தவர்களால் இது இயலாது.

வில் அம்புகளைக் கண்டாலும், வேல் கம்புகளைக் கண்டா லும் அறிவுடையோர் அஞ்சுவதில்லை. எதற்கும் அஞ்சாத இவ்வீரர்கள் பழி பாவங்களைக் கண்டால் பெரிதும் அஞ்சி நடுங்குவர்.

அறிவுடையோர் அதிகமாகப் பேசுவதில்லை. குறை

வாகப் பேசினும், எதிரியின் உள்ளத்திற் பதியுமாறு தெளி

வாகப் பேசுவர். அதுமட்டுமல்ல; எதிரியின் பேச்சுகளுக்குள்

ஆ. -8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/39&oldid=956450" இலிருந்து மீள்விக்கப்பட்டது