பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 ஆறு செல்வங்கள்

எப்படி இருந்தது?" என்று அவரை வினவியபோது, "ஈசன் திருவடியில் நான் இருந்தேன். அது எனக்கு மிகவும் குளிர்ச்சி யாக இருந்தது' என்று பாடியதாகவும் தேவாரம் கூறுகிறது. அப்பாடல் இது:

மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே. கருத்து மட்டுமல்ல. இப்பாடலில். ஒரு நயமும் புதைந்து கிடக்கிறது. அது மெய், வாய், கண், மூக்குக்கு, செவி ஆகிய ஐம்புலனுக்கும் குளிர்ச்சியும். இனிமையும் தருகின்ற ஐந்து பொருள்களை இதில் காண்பதேயாம்.

மாசில் வீணை- காதுக்கு, மாலை மதியம்-கண் ணுக்கு, வீசும் தென்றல்- மூக்குக்கு, வீங்கு இளவேனில் -உடம்பிற்கு, தாமரைப் பொய்கையின் நீர்

நாவிற்கு, இப்புதை பொருளைக் காணும்போது நமது உள்ளமும்கூட குளிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைகின்றது.

நாவுக்கரசர் ஐம்புலன்களுக்கு ஐந்து பொருள்களைக் குறிப்பிட்டுக் காட்டினார் என்றாலும் ஐம்புலன்களுக்கும் இனிமைதரும் ஒரே பொருளைக் காட்ட நம்மால் முடியுமா? முயன்று தேடுவோம் வாருங்கள்.

1. வீணை-காதுக்கு இனிமை தரும்.

கண்ணுக்கு? மூக்குக்கு? நாவுக்கு? உடம்புக்கு?

2. கற்கண்டு-நாவுக்கு இனிமை தரும்.

காதுக்கு? மூக்குக்கு? கண்ணுக்கு? உடம்புக்கு?

சி. மலர்-கண்ணுக்கும் மூக்குக்கும் இனிமை தரும்.

உடம்புக்கு? நாவுக்கு? காதுக்கு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/46&oldid=956467" இலிருந்து மீள்விக்கப்பட்டது