பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 - ஆறு செல்வங்கள்

அழைத்துக் கொள்ளுவார். முதலில் அவர் தவறு செய்வ தில்லை. தம்மையே திருத்திக்கொள்வார். திருத்திக் கொள்ள முடியாத பல பழக்கவழக்கங்ளைப் பிள்ளைகளின் எதிரே அவர்கள் அறியும்படி செய்யமாட்டார் அறிந்தால் பிள்ளைகள் கெட்டுவிடுவார்கள் என்பது அவரது முடிவு. தமிழகத்துப் பெற்றோர்களெல்லாம் தம்பித்துரை உபதேசி யாரானால், தமிழகம்...? ? ?

தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும்

என்பது வள்ளுவர் வாக்கு. எச்சம் என்பதற்கு எச்சில் உண்மை, குறை, செயல், மிச்சம் பறவை, மலர், பிள்ளை எனப் பல பொருள் உண்டு. பரிமேலழகர் எடுத்துக் கொண்ட பொருள் 'பிள்ளை' என்பது, அதுவே சரி. ஆனால் மேற் கொண்டு அவர் பொருள் விளக்கும் முறையே மாறானது.

"ஒருவர் தக்கவரா அல்லவரா என்பதை அவரவர் களுக்கு மக்கள் உண்மையாலும் இன்மையாலும் அறியப் படும். தக்கார்க்கு எச்சமுண்டாதலும். தகவிலர்க்கு இல்லை யாதலும் ஒரு தலை யெனவும் கூறியிருக்கிறார். இதை நம்மால் ஒப்புக்கொள்ள இயலாது, ஒப்புக் கொள்வதானால் தாயுமானவர், இராமலிங்க அடிகளைப் போன்றவர்களை யும் தகவிலர் எனக் கூறும்படி நேர்ந்துவிடும். அவர்களைத் துறவிகள் என ஒதுக்கிவிட்டாலும், இராமகிருட்டின பரம அம்சர், ஏன்? திருவள்ளுவரையே மக்கள் இன்மையால் தகவிலர் எனக் கூறவேண்டி நேர்ந்துவிடும். இதை உலகம் ஏற்காது. -

பெற்றோர்கள் எதையும் மறைத்துச் செய்யவும் மறைத்துப் பேசவும் ஆற்றல் பெற்றவர்கள். குழந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/50&oldid=956475" இலிருந்து மீள்விக்கப்பட்டது