பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

ஆறு செல்வங்கள்


பிள்ளைகளின் உடல் வளர்வதைப் போலவே அவர்களது அறிவும் வளர்ந்து வரும். நாளுக்கு நாள் இவர்களது சிந்தனையும் வலுப்பெற்று வரும். அதனால் அவர்கள் தங்கள் நோக்கங்களைப் பெருக்கிக்கொண்டே வருவார்கள். அவர் களது முதல் அறிவு கேள்வியாலேயே வளர்கின்றது. ஆகவே, நமக்கு எவ்வளவு தொல்லைகள் இருந்தாலும் அமைதியாக இருந்து அவற்றிற்கு எல்லாம் விடை கூறியாக வேண்டும். விளையாட்டிற்காகவும் பொய் சொல்லக் கூடாது. வேடிக்கைக் காகவும் ஏமாற்றக்கூடாது. எதையும் கூறி அச்சுறுத்தலாகாது. சிற்றோடையில் ஊறி ஒடும் தெளிந்த நீரென அவர்கள் உள்ளத்தில் அறிவு தானாகச் சுரந்து வழியும். அதனை வளர்க்கப் பெரிதும் முயலவேண்டும். அதைத் தடைப் படுத்தாமலாவது இருந்துவிட வேண்டும் பழமையைப் புகுத்தினாலும் பகுத்தறிவு கொண்டு புகுத்தவேண்டும். "இரண்டு கழுதைகளுக்கு மத்தியில் போகாதே; போனால் சாத்திரத்திற்காகாது” என்று கூறலாகாது. "இரண்டு கழுதைகளுக்கு மத்தியில் போகாதே. போனால் எந்தக் கழுதையாயினும் உதைக்கும்” என்று கூறுவது நலமாகும். இம்முறை குழந்தைகளின் அறிவை வளர்க்கப் பெருந்துணை செய்யும். - -

பழங்காலத் தாய்மார்கள் குழந்தைகளின் உடலை, அறிவை மட்டும் வளர்த்து வரவில்லை. அவர்களின் வீரத் தையும் வளர்த்து வந்தார்கள். அக்காலத்தில் தமிழ் மகள் ஒருத்தி, -

மகனைப் பெற்றுக் கொடுப்பது எனது கடமை அவனைச் சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை அவனை நல்வழி நடத்துதல் வேந்தனின் கடமை அவனுக்கு வேல்வடித்துக் கொடுத்தல்

- கொல்லனின் கடமை