பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 <鹦驴 செல்வங்கள்

ஒருவன் பெறவேண்டிய பேறுகளில், அறிவறிந்த நன் மக்களைப் பெறுவதே சிறந்த பேறு. பண்புடைய நன் மக்களைப் பெற்று ஒருவனது குடும்பத்தை, ஏழு தலைமுறை ஆயினும் துன்பம் சென்றடையாது. தம் புதல்வரைத் தமது பொருள் என்றும், தன் மக்களின் பொருள் அவரவர் செயலைப் பொறுத்தது என்றும் அறிஞர் கூறுவர். தம் மக்கள் சேறுபடிந்த சிறுகையால் குழப்பிய கூழ் அமுதத்தினும் மிக இனிமை பயப்பதாக இருக்கும். யாழின் ஒலியும், குழலின் ஓசையும் இனிமையாயிருக்கின்றன என்று கூறுபவர்கள், தம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டவர்களல்லர். தன் மகனைச் சிறந்த அறிஞன் எனச் சான்றோர்களால் கூறக் கேட்ட தாய், அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிடப் பெருமகிழ்ச்சி அடைவாள். தான் பெற்றபிள்ளை தன்னைவிட அதிக அறிவைப் பெற்று விளங்குவது தனக்கு மட்டுமல்ல, பிறருக்கும் மகிழ்ச்சியைத் தருவதாகும். 'ஒரு நல்ல தந்தை தன் மகனுக்குச் செய்யும் பேருதவி அவனைக் கல்வி, அறிவு, ஒழுக்கம் உள்ளோரின் அவையிலே முதன்மை யாக இருக்கும்படி செய்தல். ஒரு நன்மகன் தன் தந்தைக்குச் செய்யும் பேருதவி இவன் தந்தை பெரும்பேறு பெற்றான் எனப் பிறர் கூறும்படி நடத்தல்' என்பன வள்ளுவரது கருத்துக்கள்.

தமிழும் தமிழரும் தமிழகமும் சிறந்து விளங்க வேண்டு

மெனில் நாட்டில் நன்மக்கள் பலர் பிற்ந்து வளர்ந்தாக வேண்டும் என்பது சான்றோர் கருத்து. o

வாழ்க தமிழகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/54&oldid=956483" இலிருந்து மீள்விக்கப்பட்டது