பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101. - ஆற்றங்கரையினிலே

பிளவியல் மதியம் சூடிய பெருமான்

பித்தன்என் றொருபெயர் பெற்றான்

களமர்மொய் கழனி சூழ்திரு ஆனைக்

- காவகி லாண்டதா யகியே” என்ற அக் கவிஞர் பாடிய அழகான பாட்டில் தண்ணீர் மூன்று பிழைதான் பொறுக்கும் என்னும் பழமொழியைத் தழுவி எழுந்த கற்பனை சிறந்த இன்பம் பயக்கின்றது.

திருஆனைக்காவில் உறையும் பெருமானைப் பணிந்து தமிழ்ப் பாமாலை பல புனைந்தார் திருநாவுக்கரசர். ‘ தனக்குவமையில்லாத் தலைவனாகிய ஈசன் திருவடியே மனக்கவலையை மாற்றும் மருந்து அதுவே, தஞ்சம் அடைந்தோரைத் தாங்கும் தகைமை சான்றது; அஞ்சேல் என்று ஆதரிக்கும் அருமை வாய்ந்தது. ஆதலால் பெற்றாரையும் உற்றாரையும் பற்றி நில்லாது பற்றற்ற பரம்பொருளையே பற்றுக என்று பாடியுள்ளார் திருநாவுக்கரசர்”

காவிரியாற்றின் இடைக் குறையில் சிவனும்

திருமாலும் சேர்ந்து காட்சி தருகின்றார்கள். திரு ஆனைக்காவிற்கு அண்மையில் “தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திரு அரங்கம் “ அமைந்துள்ளது. இவ் வண்ணமே காவிரியாற்றின் முதல் அரங்கமாகிய சீரங்கப் பட்டணத்திலும் அரங்கநாதன் கோயிலுக்கு அருகே கங்காதரனுக்கு உரிய சிவாலயம் ஒன்று உண்டு. காவிரியின் இடை அரங்கமாகிய சிவசமுத்திரத்திலும் சோமநாதன் கோயிலுக்கு அருகே அரங்கநாதன் ஆலயம் உள்ளது.

இவ்வாறு காவிரித்தாய் அரனும் அரியும் ஒன்றே என்று தன் மூன்று அரங்கங்களிலும் ஐயந்திரிபற அறிவித்திருப்பினும் மக்களின் மதவெறியால் ஒர்ோவழி சமயப் பிணக்கம் நேர்ந்ததும் உண்டு. மாதா சேர்த்து வைத்த மதக் குடும்பத்தை மக்கள் பிரிக்க முயல்வது முறையாமோ?