பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 ஆற்றங்கரையினிலே

காவிரி நாட்டிலே கடுமழை பெய்தது; ஆற்றிலே புது வெள்ளம் பொங்கி எழுந்தது. இரு கரையிலும் துரை செறிந்தது. கலங்கிச் சென்ற காவிரியின் இழுப்பும் சுழிப்பும் கண்டு இரு கரையிலும் நின்ற மாந்தர் மனங் கலங்கினர். அப்போது அங்கு வந்து சேர்ந்தார் சுந்தரமூர்த்தி ஆற்றைக் கடந்து, திரு ஐயாற்றை அடைவதற்கு வழி யொன்றும் காணாது “ஐயாறுடைய இறைவா ஒலம் ” என்று அரற்றினார். அந் நிலையில் வெள்ளம் வடிந்தது; அடியார் உள்ளம் மகிழ்ந்தது; காவிரிக் கோட்டத்தைச் சுற்றி வந்து கையாரத் தொழுதார்; நாவாரப் பாடினார் சுந்தரர்.

திருவ்ையாற்றுக் கோவிலைச் சூழ்ந்த செழுஞ் சோலையில் கலையும் பிணையும் களித்துத் திரியும்; களிறும் பிடியும் காதல் புரியும்; கடுவனும் மந்தியும் கொஞ்சிக் குலாவும். இத்தகைய இனிய சூழ்நிலையில் நெஞ்சாரத் தொழுதேத்தும் அடியார்க்கு அஞ்சேல் என்று அருள்புரியும் இறைவன் அமர்ந்திருக்கும் அழகிய கோலத்தைக் கண்டு திளைத்தார் திருஞானசம்பந்தர்.

“ புலன்ஐந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட் டைம்மே லுந்தி அலமந்த போதாக அஞ்சேல்என்று

அருள்செய்வான் அமரும் கோயில் வலம்வந்த மடவார்கள். நடமாட

முழவதிர மழையென் றஞ்சிச் சிலமந்தி அலமந்து மரமேறி

முகில்பார்க்கும் திருவை யாறே” என்று பொன் மொழிகளால் போற்றினார். பிறவிப் பெருங் கடலில் விழுந்து வருந்தும் உயிர்களைக் கரையேற்ற வல்லவன் இறைவன் ஒருவனே! தஞ்சம் அடைந்தோரைத் தாங்கும் தகைமை வாய்ந்த தலைவன் ஒருவனே! போக்கற்ற வர்க்குப் புகலிடமாய் அமைந்த புண்ணியமூர்த்தி ஒருவனே! இறுதிக் காலத்தில் பொறிகலங்கி, நெறி மயங்கி,