பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவையாறு - - 303

அறிவிழந்து ஆவி அலமரும் பொழுது அபயம் அளிக்க வல்ல பெருமான் ஒருவனே அவன் திருவையாற்றுக் காவிரிக் கோட்டத்தில் அமர்ந்துள்ளான் என்று அறிவுறுத்துகின்றார் திருஞானசம்பந்தர். . .

அக் கோயிலிற் போந்து அக்முருகிப் பாடினார் பலர். ஆலயத்தைச் சுற்றி நடன மாடினார் நங்கையர். அப்போது தாளம் எழுந்தது மத்தளம் அதிர்ந்தது. அம் முழக்கத்தைக் கேட்ட சில மடமந்திகள் இடியோசை என்று எண்ணி மரத்தின் மேல் விரைந்து ஏறின. மழை வருமோ என்று வானத்தைப் பார்த்தன; இவ்வாறு அலமந்த சில மந்தியையும் ஐயாற்றுப் பாட்டிலே காட்டி அடியாரை மகிழ்விக்கின்றார் திருஞான சம்பந்தர்.

திருவையாற்றுக்கு அருகே உள்ள தஞ்சையம்பதி, இராசராசன் காலத்தில் சோழ நாட்டின் தலைநகர் ஆயிற்று. அதனால் திருவையாறு பீடும் பெருமையும் உற்றது. பட்டத்தரசி யாகிய உலோகமாதேவி அங்கே ஒரு திருக்கோயில் கட்டினாள். காவிரிக் கோட்டத்தின் வடக்குத் திருச்சுற்றில் அமைந்த அவ்வாலயம் உலகமாதேவீச்சுரம் என்னும் பெயர் பெற்றது. இக்காலத்தில் உத்தர கைலாசம் என்று வழங்கும் கோயில் அதுவே.

அறம் வளரும் திருவையாற்றிலே அன்ன சத்திரம் பல உண்டு. அவற்றுள் மிகச்சிறந்தது சரபோசி மன்னன் நிறுவிய அறச் சாலையாகும். ஆற்றங் கரையில் அழகாக வீற்றிருக்கின்றது அரண்மனை போன்ற அவ்வறச் சாலை, இப்போது நாட்டு மொழி பயிலும் மாணவர்களுக்கு உண்டியும் உறையுளும் தந்து உதவுகின்றது அந் நிலையம். காசிக்கு வீசம் அதிகம்’ என்று கருதப்படும் திரு வையாற்றிலே பல்லாண்டு வாழ்ந்தார் திக்கெல்லாம். புகழுறும் தியாகையர். அவர் புகழுடம்பு பெற்ற ஐயாற்றில் ஆண்டு தோறும் இன்னிசை வெள்ளம் பொங்கிப் பெருகுகின்றது.