பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழையாறை

உதய சந்திரன் என்னும் வீரன் படைத்தலைமை பூண்டு, நந்திபுரம் போந்து மாற்றரசர் சேனையோடு போர் தொடுத்தான் வெற்றி பெற்றான்; மன்னனை விடுவித்தான். இவ்வாறு காலத்தில் உதவி புரிந்த உதய சந்திரன் பெயர் தாங்கி நிற்கின்றது, வடவார்க்காட்டு மாவட்டத்தில் உள்ள உதயேந்திரம் என்னும் ஊர்.

நந்திபுர விண்ணகரில் வீற்றிருக்கும் திருமால், ஜகந் நாதன் என்று அழைக்கப் பெற்றார். அதனால் ஜகந்நாதன் கோயில் என்னும் பெயரும் அவ்விண்ணகரத்திற்கு அமைந்தது. நாளடைவில் அப்பெயர் குறுகி நாதன் கோயில் என்று வழங்கலாயிற்று.

சோழர்குல மனிவிளக்காய் இலங்கிய இராஜராஜன் காலம் வரை நந்திபுரம் என்னும் பெயர் பழையாறைக்கு வழங்கி வந்ததாகத் தெரிகின்றது. அவன் தந்தையாகிய கத்தரச் சோழனை நந்திபுரி மன்னன் என்று புகழ்ந்து வாழ்த்துகின்றது ஒரு பழம் பாட்டு:

போதி மரத்தின்கீழ் அமர்ந்த புத்த தேவா நந்தி புரியில் வாழும் சுந்தரச்சோழன் கொடைத்திறமும், கட்டழகும், படைத்திறமும் உடையவனாய்ப் பல்லாண்டு சிறந்து வாழ அருள்புரிதல் வேண்டும் என்று விண்ணப்பம் செய்கின்றார் அப்பாவலர்.க

இத்தகைய சீர்மை வாய்ந்த பெரு நகரில் சோழன் மாளிகை சிறந்து விளங்கிற்று. ஆயிரம் மாடங்களை உடையதாய் நின்று நிலவிய அம்மாளிகை ஆயிரத்தளி’ என்று பெயர் பெற்றது. ஆயிரம்தளி கூடின இடம் ஆயிரத் தளி என்று அப்பெயரின் பொருளை விளக்குகின்றது வீர சோழிய உரை “ஆடகப் புரிசை ஆயிரத்தளி” என்று புகழப் பெற்ற அவ்வரண்மனையில் முடிசூட்டு விழாக்கள் நடைபெற்றன. அங்கு நின்ற அரியாசனத்தில் அமர்ந்து மாநில மன்னர் அரசாங்க ஆணை பிறப்பித்தனர். இராஜ