பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழையாறை 112

அறிந்தார்; மனம் நொந்தார். எவ்வாற்றானும் வடதளியில் உள்ள இறைவனை வணங்கியே தீர்வேன் என்று நெஞ்சுறுதி கொண்டார்.

“ வண்ணம் கண்டு நான்உம்மை

வணங்கி யன்றிப் போகேன்என்று எண்ணம் முடிக்கும் வாகீசர்

இருந்தார் அமுது செய்யாதே”

‘ஐயனே வடதளியில் கோயில் கொண்ட வள்ளலே ! தின் திருமேனியைக் கண்டாலன்றி இவ்விடம் விட்டுப் பெயரேன் என்று திண்ணிய மனம் உடைய திருநாவுக்கரசர் விண்ணப்பம் செய்தார்; உண்ணாவிரதம் பூண்டார். உயரிய குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக உண்ணாவிரதத்தை மேற்கொண்ட அடியாரைக் கண்டனர் பழையாறை மக்கள் நெஞ்சம் துடித்தனர்; வஞ்சனையை ஒழிப்போம் என்று வஞ்சினம் கூறினர்; அரசனிடம் சென்று முறையிட்டனர். மன்னன் ஆணை பிறந்தது; தடை யெல்லாம் தகர்ந்தது; மறைப்பனைத்தும் மாய்ந்தது. மங்கை பங்கனைக் கண்டு அங்கம் குளிர்ந்தனர் அடியார் எல்லாம்.

ஆன்ம வீரத்த்ால் அரும்போர் நிகழ்த்தி வெற்றி பெற்ற நாவரசர் உச்சி மேற் கை குவித்து, ஆனந்தக் கண்ணிர் சொரிந்து, ஆலயத்தின் உள்ளே சென்று அகமுருகிப் பாடினார்.

“ஆதியைப் பழையாறை வடதளிச்

சோதியைத் தொழுவார் துயர் தீருமே ”

என்று தமிழ்ப்பாட்டு இசைத்தார்.

இவ்வாறு பன்னிரு நூற்றாண்டுகளுக்கு முன்னே சத்தியாக்கிரகத்தின் வெற்றி கண்டது பழையாறை நகரம். அதை நினைத்தே “ பாரில் நீடிய பெருமை சேர்பதி பழையாறை “ என்று பாடி மகிழ்ந்தார் சேக்கிழார் பெருமான்.