பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. திருநாகேச்சரம்

தமிழ் நாட்டிலே குற்றாலம் இரண்டு உண்டு; பாபநாசமும் இரண்டு உண்டு; திருநாகேச்சரமும் இரண்டு உண்டு. சோழ நாட்டிலே கும்பகோணத்துக்கு அருகே உள்ளது ஒரு நாகேச்சரம், தொண்டை நாட்டிலே குன்றத்துாருக்கு அண்மையில் உள்ளது, மற்றொரு நாகேச்சரம் சோழ நாட்டுத் திருநாகேச்சரம் பழங்காவிரி யாற்றின் கரையில் அமைந்த பாடல் பெற்ற பகுதியாகும்.

குலோத்துங்க சோழன் தமிழ் நாட்டை ஆண்ட காலத்தில் அவன் அவைக்களத்தில் முதலமைச்சராக விளங்கினார் சேக்கிழார் என்னும் தமிழ்ப் பெருமகன். அவர் தொண்டை நாட்டுக் குன்றத்துரிலே பிறந்தவர்; நூலறிவும் நுண்ணறிவும் பெற்றவர். சிவநெறியும் செந்தமிழும் பேணி வளர்த்தவர். தமிழ்மாலை பெற்ற தலங்களையெல்லாம் வழிபடும் பேறு பெற்ற அப்பெருமான் நாகேச்சரத்தில் திருப்பணிகள் பல செய்தார்.

தேவாரம் பாடிய மூவருள் ஒருவராகிய சுந்தரமூர்த் தியின் உள்ளங் கவர்ந்தது திருவாரூர்ப் பூங்கோயில். திருவாசகம் அருளிய மணிவாசகரின் மனத்தை அள்ளிக் கொண்டது திருப்பெருந்துறை. அவ்வண்ணமே திருத் தொண்டர் புராணம் பாடிய சேக்கிழாரின் சிந்தையைக் கொள்ளை கொண்டது திருநாகேச்சரம். அங்கே போந்து ஈசனைப் போற்றாத நாளெல்லாம் பிறவா. நாளே என்று