பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 ஆற்றங்கரையினிலே

இலங்கையில் அரசு புரிந்த இராவணனை வென்று ஒடுக்கிய வாலிதான் காவிரித்துறையில் ஈசனை வழிபட்டான் என்பதும் நன்கு விளங்குகின்றது.

“நீலமா மணிநிறத்து அரக்கனை

இருபது கரத்தோடு ஒல்க வாலின்ால் கட்டிய வாலியார்

வழிபட மன்னு கோயில்”

என்பது திருஞான சம்பந்தர் வாய்மொழி. தேவாரத்திலே குறிக்கப்பட்ட இவ் வரலாற்றை இராமாயணத்தில் விரிவாகக் காணலாம்.

வலிமை சான்ற வாலியை வஞ்சனையால் வெல்லக் கருதினான் இராவணன் சிவ பூசை செய்யும் வேளையில் அவ் வீரனைப் பற்றிச் சிறை செய்தல் எளிது என்று எண்ணினான்; தென் கடற்கரையில் வழிபாடு செய்து கொண்டிருந்த வாலியின் பின்புறமாகச் சென்று இருபது கைகளாலும் அவனைப் பற்றினான். அப்போது வாலியின் வழிபாடு சிறிது கலைந்தது; வீரம் செறிந்த வால் எழுந்தது; பின்னே நின்று பற்றிய பகைவனைச் சுற்றி இழுத்து இறுக்கி முடிந்தது. வலியச் சென்று கொடிய வாலிலே சிக்கிக் கொண்ட மடமையை நினைந்து மறுக்கமுற்றான் இராவணன்.

முறையாகப் பூசனை முடித்த பின்னர் இலங்கை வேந்தனைக் கண்ணுற்றான் வாலி. நிருதர் தலைவனே நீ என்பால் வந்த காரணம் என்ன?’ என்று வினவினான். ‘ வீரனே ! உன்னோடு போர் செய்யக் கருதி வந்தேன்; வாலில் அகப்பட்டேன் வாடினேன்; வருந்தினேன் ‘ என்றான் இராவணன். போர் என்ற சொல்லைக் கேட்டபோது பொங்கி நிமிர்ந்தன வாலியின் தோள்கள். உள்ளக் கிளர்ச்சியோடு நேர்மையாகப் பேசலுற்றான்: