பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரங்காடுதுறை - #28 மனங் கலங்கிக் கண்ணிர் வடிக்கும் மங்கையாகிய சீதையின் கற்புக் கனலன்றோ இந்நகரத்தைச் சுட்டெரித்தது? அன்றியும் உனக்குக் குரங்கினால் கேடு வரும் என்று முன்னே சாபம் உண்டு வாலியின் வாலாற் கட்டுண்டு நீ கலங்கியது அச் சாபத்தை மெய்ப்பித்தது அன்றோ?’ என்று வினயமாகப் பேசினான்.

இவ்வாறு பேசிய விபீஷணனை நோக்கி, தம்பி நீ அறியாது பேசினாய் ! வானர வீரனாகிய வாலியிடம் நான் தோற்றேன் என்பது உண்மைதான். ஆனால் எப்படித் தோற்றேன் என்பது நீ அறியாய் அம்பலத்தில் ஆடுகின்ற எம்பெருமானை வழிபட்டு அரியதோர் வரம் பெற்றிருந்தான் வாலி. அதனை அறியாது அவனோடு போர்புரியச் சென்றேன். இறைவன் அருளிய வரத்தின் படியே என் வலிமையிற் பாதி அவன்பால் சென்றது. என் வலியும் தன் வலியும் கொண்டு என்னை வென்றான் வாலி. எனவே, வரங்கொண்ட வாலிக்குத் தோற்றேனே யன்றி, வால்கொண்ட வாலிக்குத் தோற்றேன் அல்லேன்’ என்று மழுப்பினான் இலங்கை மன்னன்.

வாலியின் மைந்தனாகிய அங்கதனும் இராவணனிடம் ஒரு முறை தூது செல்ல நேர்ந்தது. இலங்கையைப் போர்க்களமாக்கி, எண்ணிறந்த உயிர்களை மாய்ப்பதற்கு மனமிசையாத இராமன் அங்கதனை அழைத்து, நம்பி ! இராவணனிடம் நீ தூது சென்று சிறையில் வாடும் சீதையை விடுகின்றானா? அல்லது செருக்களத்தில் ஆவியை விடுகின்றானா? என்று கேட்டு இரண்டில் ஒன்றை அறிந்து வா’ என்று அனுப்பினான். அவ் ஆணையைத் தலைமேற் கொண்டு சென்றான் அங்கதன். படை திரட்டிக் கொண்டிருந்த இராவணன் அவனைக் கண்டு பரபரப் புற்றான். அரக்கனது சீற்றத்தை அறிந்தும் சிறிதும் அச்சமுறாத அங்கதன் பேசலுற்றான்; அரசே, என்னை ஆளுடைய தலைவன் பூதநாயகன், புவிக்கு நாயகன், வேத