பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#23 ஆற்றங்கரையினிலே

நாயகன்; விதிக்கு நாயகன்; சீதை நாயகன்; அவன் விடுத்த துரதன் யான் ‘ என்று தன்னை அறிவித்தான்.

அப்போது இராவணன் எள்ளி நகைத்தான். வலிமை சான்ற அரனிருக்க, அரியிருக்க, அயன் இருக்க, மரத்திலே திரியும் மந்திகளை யெல்லாம் மறித்துத் திரட்டி இலங்கையிற் புகுந்த உன்னை இங்கே தூதனுப்பிய மனிதனோ உலகநாதன்? தேவரிற் சிறந்த மூவரும் இங்கு வருவதற்கு அஞ்சுவர். என்முன் அஞ்சாது வந்த நீ யாவன்? என்றான்.

அது கேட்ட அங்கதன் ஐயனே முன்னொரு நாள், இராவணன் என்பான் ஒருவனைத் தன் வாலினால் இறுக்கி வென்று மலைதொறும் தாவிய வாலியின் மைந்தன் யான்’ என்று மாற்றம் உரைத்தான். 5

தன் எதிரே நின்றவன் வாலியின் மைந்தன் என்று அறிந்து போது அரக்கர் கோன் உள்ளத்தில் ஆர்வம் பெருகிற்று. அவனை வளைத்துத் தன்பால் இழுத்துக் கொள்ள முயன்றான்; நயமொழி பேசினான். ஆயினும் அரக்கனது சூழ்ச்சியை அறிந்த அங்கதன் அவனை வெறுத்துப் பேசி வெளியேறினான்.

இவ்வாறு இராமாயணத்தில் விரித்துரைக்கப்படும் செய்திகள் வாலியின் வீரத்தையும் சீலத்தையும் நன்கு விளக்குவனவாகும்.