பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. ஆதனூர்

சிதம்பரம் போகாமல் இருப்பேனோ சென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ என்று கொள்ளிட நதிக் கரையில் நின்று உள்ளம் கசிந்து உருகினார் ஒரு தொண்டர். கட்டையிருக்கையில் சிதம்பரம் போய்க் காண வேணும் ஐயே’ என்று அவர் கண்ணிர் விட்டுக் கதறினார். இவ்வாறு அல்லும் பகலும் தில்லைச் சிற்றம்பலத்தையே நினைந்து உருகிய நந்தனார் என்னும் நல்லார் கொள்ளிடநதிக் கரையில் உள்ள ஆதனூரில் பிறந்தவர். புலையர் குலத்தைச் சேர்ந்தவர்; சேரியிலே வாழ்ந்தவர். அங்கே எலும்பும் தோலும் குவிந்திருக்கும் பருந்தும் கழுகும் வட்டமிடும்; பன்றியும் நாயும் படுத்திருக்கும். இத்தகைய சூழ்நிலையில் சித்தத்தைச் சிவன்பால் வைத்த சீலராய் விளங்கினார் நந்தனார்.

“ சிவனேக தாதனைக் கண்டு

சேவித் திடுவோம் வாரீர்”

என்று ஆனந்தக் களிப்புற்று ஆடினார்.

ஈனத் தொழில் புரிந்து, ஊனைத் தின்று உழன்று, ஈசனை மறந்தொழிந்த தம் இனத்தாரைப் பாசங் கலந்த மொழிகளால் பரிந்தழைத்தார்.

ஆதனுருக்கு அருகே திருப்புன்கூர் என்ற பாடல்

பெற்ற பழம் பதி அமைந்துள்ளது. அப் பதியை நாடிற்று தத்தனார் உள்ளம். சேரி மாத்தரித் சிலர் அவருடன்