பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 ஆற்றங்கரையினிலே

அக் காட்சியைக் கண்டபோது பொறுமை இழந்தான் தந்தை பொல்லாத சீற்றமுற்றான். பெருங்கிளை யொன்றை ஒடித்து, ஓடிவந்து பையனைப் பன்முறை அடித்தான். பாற் குடங்களைக் காலால் இடறிக் கவிழ்த்தான். அந் நிலையில் பூசை கலைந்தது. தகாத செயல் செய்த தந்தையின் கால்களை ஒரு கோலால் அடித்து முரித்தான் இளைஞன். அங்கேயே விழுந்து தந்தை இறந்தான்.

தவறு செய்தவன் தந்தையே ஆயினும் தயங்காது ஒறுத்த மைந்தனை மாநிலம் வாயார வாழ்த்திற்று. மங்கை பங்கனும் மனம் மகிழ்ந்து அவனுக்குச் சண்டீசப்பதம் அளித்துத் திருத்தொண்டர் குலத்திற்குத் தலைவனாக்கி னான். அன்று தொட்டுச் சண்டிேகரர் என்று போற்றப்படும் இத் தொண்டர் பெருமையைத் தேவாரமும் புகழ்ந்து பாடிற்று:

உமையம்மையோடு இனிதமர்ந்த ஈசன் வலத் திருவடியில் சண்டீசரை வைத்து, அவர் முடிமீது மலர் மாலை சூட்டி, சண்டீசப் பதம் அளிக்கும் சிற்பத்தைக் கங்கை கொண்ட சோழேச்சரத்தில் இன்றும் காணலாாம்.