பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. அடைக்கல மாதா

மனக்கவலை இல்லாத மாந்தர் இம்மாநிலத்தில் இல்லை. அளவிறந்த பொருள் உடைய அரசர்க்கும் கவலை உண்டு அருள் ஆர்ந்த மனம் உடைய அறவோர்க்கும் கவலை உண்டு.

இவ்வாறு எல்லோரையும் அலுத்துக் குலைத்து அல்லற்படுத்தும் மனக்கவலையை மாற்றுதற்கு ஏற்ற் மருந்தொன்று கண்டனர் மெய்யறிவுடைய மேலோர். அம் மருந்தின் தன்மையைத் தெள்ளத் தெளிய உணர்த்து கின்றார் திருவள்ளுவர்.

“ தனக்கு உவமை இல்லாதான்

தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.” என்பது அவர் வாக்கு இறைவன் ஒருவனே தன்னிக ரில்லாத் தலைவன். அவனே தஞ்சம் அடைந்தோரைத் தாங்க வல்லவன்; அடைக்கலம் புகுந்தோரை ஆதரித்துக் காக்கும் அருள் உடையவன். அவன் சரணல்லால் சரண் இல்லை என்று உணர்ந்து தஞ்சம் அடைந்தவரே தலைப்படுவர்; மனக்கவலை தீர்ந்த மாறிலா இன்பத்தில் மகிழ்ந்திருப்பர்’ என்று அறிவுறுத்துகின்றார் திருவள்ளுவர்.

தனக்குவமை இல்லாத் தலைவன் திருவடி சேர்ந்து எவராலும் கடத்தற்கு அரிய விதியையும் கடந்தான், அந்தணனாகிய மார்க்கண்டன். அடைக்கலப் பொருளாகிய