பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவூர் $44

பழங் காலத்தில் கருவூர் ஒரு விரிநகராக விளங்கிற்று. “ உறையூரிற் பெரிது கருவூர் “ என்று அக் கடிநகரைப் பாராட்டினார் ஒர் உரையாசிரியர், அந்நகரம் பழங் காலத்தில் சேர மன்னர்க்கு உரியதாய் இருந்தது. அதனாலேயே,

“ கடும் பகட்டு யானை

நெடுந்தேர்க் கோதை திருமா வியனகர்க் கருவூர்”

என்று அகநானூற்றுப் பாடல் எழுந்தது. அந்நாளில் வஞ்சி என்னும் பெயரும் கருவூர்க்கு உண்டு.

சோழ மன்னர்க்கு உரிய பெரு நகரங்களுள் ஒன்று கருவூர் என்று அருளிப் போந்தார் திருத்தொண்டர் புராணம் பாடிய சேக்கிழார் பெருமான். புகழ்ச் சோழன் என்னும் மன்னன் உறையூரில் அரசு வீற்றிருந்து ஆண்டபோது ஒரு நாள் குடபுல மன்னரிடம் கப்பம் பெறுவதற்காகக் கொங்கு நாட்டுக் கருவூருக்கு எழுந்தருளினான். அவ்வூரை,

“மன்னிய அநபாயன் சீர்

மரபின்மா நகரம் ஆகும் தொன்னெடுங் கருவூர் என்னும்

சுடர்மணி வீதி மூதூர்” என்று பாடினார் சேக்கிழார். அந்நகரின் மதில்களிலே மஞ்சு தவழும்; சோலைகளிலே நறு மணம் கமழும்; ஆற்றிலே யானைகள் நீராடும்; அரங்கிலே நடன மாதர் குழலாடும். இத்தகைய வளநகரில் அமைந்த மாளிகையில் சிலநாள் தங்கியிருந்தான் புகழ்ச் சோழன். -

அந்நகரில் ‘ஆனிலை என்னும் பெயருடைய பழமையான திருக்கோயில் ஒன்று உண்டு. அங்குள்ள ஈசனார்க்குப் பூமாலை புனைந்து சாத்தும் பணியை