பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் 150

மறவாதிருக்க வேண்டும்; இன்னும் அறவாழி அந்தணா ! நீ ஆடும் பொழுது உன் அடியின் கீழ் அமர்ந்து பாடி மகிழ வேண்டும் என்று விண்ணப்பம் செய்தார். தொண்டை நாட்டுத் திருவாலங்காட்டில் ஈசன் அண்டமுற நிமிர்ந்து ஆடும் அடியின் கீழ் அமர்ந்து,

“ காடும் கடலும் மலையும் மண்ணும்

விண்ணும் சுழல அனல்கை யேந்தி ஆடும் அரவப் புயங்கன் எங்கள்

அப்பன் இடம்திரு ஆலங் காடே” என்று பாடி மாறிலா இன்பத்தில் மலர்ந்தார் காரைக்கால் அம்மையார்.