பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 ஆற்றங்கரையினிலே

ஈடுபட்டிருந்தார். கவிஞர் பசி பொறுக்கமாட்டாமல் பின்னும் தமது குறைபாட்டையே பன்னிக் கொண் டிருந்தார். குறிப்பறிய மாட்டாத கவிஞரை நோக்கி, ‘ஏன் பறக்கிறீர் ! சற்றுப் பொறும் என்றார் அப் பெருமகன். அந்நிலையில் பாசங் கலந்த பசியோடு வந்தது ஒரு தமிழ்ப் பாட்டு. -

“கொக்குப் பறக்கும், புறாப்பறக்கும்

குருவிபறக்கும், குயில் பறக்கும் நக்குப் பொறுக்கி களும்பறப்பர்

நானேன் பறப்பேன் நராதிபனே ! திக்கு விசயம் செலுத்தி உயர்

செங்கோல் நடாத்தும் அரங்க்ாநின் பக்கம் இருக்க ஒருநாளும் . பறவேன் பறவேன் பறவேனே.” என்ற பாட்டைக் கேட்டு இன்புற்ற ஆனந்தரங்கர் அக் கவிஞர்க்குத் தக்க பரிசளித்து அனுப்பினார்.

புதுவை மாநகர்க்கு என்றும் அழியாத பெருஞ் சேவை செய்துள்ளார் ஆனந்தரங்கர். அந் நகரில் அவர் கண்ட காட்சிகளையும் கேட்ட செய்திகளையும் நாள்தோறும் குறித்து வைத்தார். தினசரி என்று அந்த டைரி க்குப் பேரிட்டார்.

இருபத்தைந்து ஆண்டு நிகழ்ச்சிகளைத் தன்னகத்தே கொண்ட அவ்வருமையான தினசரி, ஆங்கிலத்திலும் பிரஞ்சிலும் மொழி பெயர்க்கப்பட்டுப் பாராட்டப் பெற்றுள்ளது. அக்காலத்தில் நிகழ்ந்த அரசியல் சூழ்ச்சிகளும், வெள்ளைக்காரரின் உள்ளப் போக்குகளும், பஞ்சத்தின் கொடுமையும், லஞ்சத்தின் கொண்டாட்டமும், நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களும் அந்நூலில் விளக்கமாகக் கூறப்படுகின்றன.