பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி மாநகரம் 14

மாமல்லபுரம் உண்டு. வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வீரப் பெருமக்கள் வாழ்ந்த பழையனூரும் உண்டு. இன்னும் தென்னாட்டின் அணிகலனாய், தமிழகத்தின் தலைநகராய்த் திகழும் சென்னை மாநகரமும் உண்டு.

இத்தகைய நன்னாட்டில், வேகவதியாற்றின் கரையில் வீற்றிருக்கின்றது காஞ்சி மாநகரம். வடநாடும் தென்னாடும் வணங்கி ஏத்தும் இவ் வளநகரம் ஆதியில் தொண்டைமான் இள்ந்திரையன் என்னும் குறுநில மன்னனால் ஆளப்பட்டது என்று பழைய ஆற்றுப்படையொன்று அறிவிக்கின்றது. இளந்திரையன் வறியவரை ஆதரித்த வள்ளல்; புலவர்களைக் காத்த புரவலன்; வேளாண்மையைப் பேணி வளர்த்த வேந்தன்; காடுமேடுகளை வெட்டித் திருத்தி நாடு நகரங்கள் ஆக்கிய காவலன். தொண்டை நாட்டில், இன்றளவும் பயிர்த் தொழிலுக்குப் பயன்படுகின்ற தென்னேரி என்னும் ஏரி இம்மன்னன் பெயர் தாங்கி நிற்கின்றது. திரையன் ஏரியே தென்னேரி என மருவிற்று. திரைய மங்கலம் என்ற ஊரும் காஞ்சி மாவட்டத்தில் உண்டு.

காஞ்சிபுரத்தைச் செப்பம் செய்து கடிநகர் ஆக்கினான் கரிகாற் சோழன் என்னும் திருமாவளவன், காஞ்சி நகரைச் கற்றி நெடியதோர் மதில் எடுத்து, நன்மக்களை அங்குக் குடியேற்றிய பெருமை அம் மன்னனுக்கே உரியதாகும். *

காஞ்சி மாநகரை மாமதிற் கச்சி என்று தேவாரம் பாடிற்று. மதில் சூழ்ந்த இம் மாநகரின் அழகினைக் கண்டார் ஒரு கவிஞர்; “மயில் போன்ற மணி நகர்” என்று பாடி மகிழ்ந்தார்.

  • ” குன்று போலும்மா மதிற்புடை போக்கிக்

குடியி ருத்திய கொள்கையின் விளங்கும்"