பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகர் கோயில் . 466

கேடு சூழ்ந்தவர் உள்ளம் கிடுகிடுக்கும். நீதி மன்றங்களிலே படியேறி நெஞ்சாரப் பொய் சொல்லும் வஞ்சகரும் கறுப்பனது படி வாசலைக் கண்டால் கதறுவர் பதறுவர்; வாய்மையே பேசுவர். மதுரை மாவட்டத்திலுள்ள நீதி மன்றங்களிலே தீராத வல் வழக்குகள் படிவாசல் கறுப்பன் முன்னிலையில் நொடிப் பொழுதில் நேர்மையாகத் தீர்ந்து விடும் செய்தி பாண்டி நாட்டில் நெடுங்கதையாக வழங்குகின்றது.

கோயிற் பூனை தேவருக்கு அஞ்சாது என்று சொல்வ துண்டு. ஆனால், அழகர் கோயிற் பூனைகள் அங்குள்ள கறுப்பனுக்கு அஞ்சும். இதை நன்கு அறிந்த நன்மக்களுள் ஒருவர் காஞ்சி மாநகரைச் சேர்ந்த பச்சையப்ப முதலியார். அயலூர்களிலிருந்து அழகரை வழிபடக் கருதி வரும் அடியார்க்கு உணவளிப்பதற்காக நூறாயிரம் வராகன் பொன் அவர் சோலைமலைக் கோயிலுக்கு நன்கொடை யாக வழங்கினார். இந்த அன்னதானக் கட்டளை என்றென்றும் பழுதுறாமல் நடைபெற வேண்டும் என்று விரும்பிய பச்சையப்பர் பதினெட்டாம் படிக் கறுப்பன் பார்வையிலுள்ள ஒரு கல்லிலே அக்கட்டளையின் திட்டங்களைப் பொறித்துள்ளார்.

கறுப்பன் காவலில் அமைந்த கோட்டைகள் இரண்டு. ஒன்று புறக் கோட்டை மற்றொன்று அகக் கோட்டை அகக் கோட்டையின் உள்ளே அமைந்த அழகரை, மதிள் சூழ் சோலைமலைக்கு அரசே என்று ஆதரித்து அழைத்தார் பெரியாழ்வார். நெருக்கடியான நிலைமை வந்துற்றபோது பாண்டிய மன்னரை இக்கோட்டைகள் பாதுகாத்தன போலும் மகம்மதியர் படையெடுப்பால் சோழ நாட்டில் குழப்பமும் கொடுமையும் நிகழ்ந்த போது திருவரங்க நாதனைச் சோலை மலைக் கோட்டையிற் கொண்டு சேர்த்தனர் என்ற வரலாறு ஒன்று உண்டு.