பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 ஆற்றங்கரையினிலே

சோலைமலை அழகர் இளவேனிற் காலத்தில் வைகை யாற்றுக்கு எழுந்தருளுவார். சித்திரைத் திங்கள் மதி நிறைந்த நன்னாளில் ஆற்றிலே இறங்குவார் அழகர் அப்போது தென்னாடு முழுவதும் திரண்டெழுந்து வைகையை நோக்கிச் செல்லும். ஆற்று மணல் எங்கும் ஆணும் பெண்ணுமாய் அடியார் கூட்டமும் நிறைந்து நிற்கும். சோலை எங்கும் சோறு மணம் கமழும். நகரம் எங்கும் தெய்வ நலந் திகழும். இக்காட்சியைக் காணப் பெறாத அன்பன் ஒருவன், நான் ஆற்றைக் கண்டேனா? அழகரைத் தொழுதேனா ?’ என்று அகம் குழைந்து உருகினான்.