பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவைப்பாட்டு - 172

போய்க் காண வேணும் ஐயே!’ என்று கதறியழுதான் நந்தன் என்னும் திருத்தொண்டன். அந்த முறையில் மார்கழி நீராடும் மங்கையரும் தில்லைச் சிற்றம்பலத்தில் நடனம் ஆடும் ஈசனைப் போற்றி ஆனந்தமாய்ப் பாடுவர்.’

இவ்வாறு மங்கையர் எல்லாம் மகிழ்ந்தாடும் திருநாளைக் காணாது மயிலாப்பூரில் மரணமுற்றாள் பூம்பாவை என்னும் புனித நங்கை அப்பெண்ணின் தந்தையார் சிவநேசர் அரனடியாரிடம் அயராத அன்புடையவர். திருஞான சம்பந்தர் மயிலாப்பூருக்கு எழுந்தருளியபோது சிவநேசர் அவரிடம் தமது துயரத்தைச் சொல்லி மனங்கரைந்தார். இறந்த பூம்பாவைக்கு உயிர்ப்பிச்சை இடல் வேண்டும் என்று இரந்து நின்றார். அது கண்ட திருஞான சம்பந்தர் உள்ளம் இரங்கினார். ஈசன் அருள் நினைந்து ‘பூம்பாவைப் பதிகம் பாடினார்:

மார்கழித் திருவாதிரையும், ஆண்டாள் பாடியருளிய மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளும், பெரும் பாலும் ஒன்றுபட்டே வரும். அப் புனிதமான நாளில் இளம் பெண்கள் இறைவனைப் பணிந்து வேண்டுகின்ற வரமும் ஒன்றேயாகும்.”

ஈசனே எம் பெருமானே ! ஆதிரை நாயகனாகிய உன்னிடம் அடியேம் செய்யும் விண்ணப்பம் ஒன்று உண்டு. அதைக் கேட்டருளல் வேண்டும். எம் கண் அல்லும் பகலும் உன்னையன்றி வேறு எப்பொருளையும் காணலாகாது. எம் கை உனக்கே யன்றி வேறு எவர்க்கும் எத்தகைய பணியும் செய்யலாகாது; இந்த வரத்தை நீ தந்தருள்வாயாயின் கதிரவன் எங்கே தோன்றினாலும் எமக்குக் கவலையில்லை’ என்று இளமங்கையர் வேண்டுவதாகத் திருவெம்பாவை பாடிற்று. .