பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 ஆற்றங்கரையினிலே

“ கந்தமார் தருபொழில் மந்திகள்

பாய்தர மதுத்திவலை சிந்துபூந் துறைகமழ் திருநெல்வேலி

உறை செல்வர் தாமே ” என்று பூந்துறையுடைய பெருமானைப் புகழ்ந்து போற்றினார். அவர் வாக்கின் திறத்தால், பூந்துறை சிந்து பூந்துறையாயிற்று.

இத்தகைய சிந்து பூந்துறையில் உள்ள தருமை மடத்

தில் முன்னாளில் வாழ்ந்தார் ஒரு செந்தமிழ்ச் செல்வர். அவர் காசியிற் போந்து குமர் குருபர முனிவரிடம் கல்வி கற்றவர்; கற்பனைக் களஞ்சியம் என்று கற்றறிந்தோர் பாராட்டும் சிவப்பிரகாச முனிவரின் செந்தமிழ் ஆசிரியர்; வெள்ளியம் பலவாணர் என்னும் பெயருடையவர். தேவாரம் முதலிய திருமுறைகளில் நிரம்பிய அறிவு வாய்ந்திருந்த இக்கவிஞர் தாம் இயற்றிய சில பாடல்களைத் திருமுறைப் பாடல்களின் இடையே செருகிச் சேர்த்து விட்டார் என்று சொல்லப்படுகின்றது. இவர் செருகிய பாடல்களை வெள்ளி பாடல் என்று கூறுவர் தெள்ளறி வுடையோர்.

நெல்லையம்பதியிலே எண்ணிலும் எழுத்திலும் வல்லார் பலர் வாழ்ந்தார்கள்; பண்ணிலும் பாட்டிலும் சிறந்தார். பலர் திகழ்ந்தார்கள்; அவர்களுள் ஒருவர் அழகிய சொக்கநாதர். அறுபது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அவர் வாக்கிலே ஒளியுண்டு; பாட்டிலே சுவையுண்டு. நெல்லையம்பதியில் கோயில் கொண்டருளும் காந்திமதி அம்மையைப் பிள்ளைத்தமிழ் மாலை அணிந்து போற்றினார் அக்கவிஞர். அப்பிள்ளைத்தமிழில் கவிச் சுவையும் பக்திச் சுவையும், களிநடம் புரியக் காணலாம்: பொதிய மாமலையிலே, பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த பசுந்

12