பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. தென்காசி

பாரத நாட்டிலே கங்கைக்கும் காசிக்கும் தலைசிறந்த பெருமை உண்டு. சிவகங்கையும் சிவகாசியும் தென் னாட்டில் உள்ள சிறந்த நகரங்கள். “கங்கை கொண்டான் . என்ற சிறப்புப் பெயர் பெற்றான் ஒரு சோழ மன்னன். காசி கண்டான்’ என்று பாராட்டப் பெற்றான் ஒரு பாண்டிய மன்னன்.

இப் பாண்டியன் கண்ட காசி தென்காசி என்னும் திருப்பெயர் பெற்றது. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த இம்மன்னனைக் காசி கண்ட பராக்கிரம பாண்டியன் என்று தென் பாண்டி நாடு போற்றிப் புகழ்ந்தது’ -

வட காசியை வாழ்விக்கும் கங்கைபோல் தென் காசியைப் புனிதமாக்குவது சித்திரா நதி. ஞானிகளும் அறியார்கள் சித்ரா நதி மூலம் என்று குற்றாலக் குறவஞ்சி அதன் பிறப்பின் மேன்மையைப் புகழ்ந்து பேசிற்று. திருக்குற்றால மலையில் உள்ள செழுஞ் சோலைகளிலும், செண்பகக் காடுகளிலும் நுழைந்து, பொங்கு மாகடல் என்னும் பொய்கையில் விழுந்து எழுந்து தென்காசியை நோக்கி விரைந்து செல்லும் சித்திரா நதியின் இருமருங்கும் பழங் காலத்தில் செண்பகக் காடு செறிந்திருந்தது. கடம்ப வனத்திலே மதுரையும், வேணு வனத்திலே நெல்லையும், தில்லை வனத்திலே சிதம்பரமும் தோன்றியவாறு செண்பக வனத்திலே எழுந்தது தென்காசி நகரம். சித்திரா நதியின்