பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்காசி - $36

தென்காசிக் கோயில் பழுதுபடாமல் நெடுங்காலம் நின்று விழுமிய பயனைத் தரல் வேண்டும் என்று விரும்பினான் இவ் வேந்தன். ‘எப்போதேனும் இக்கற்பணி யில் குற்றங்குறை கண்டால் அவற்றை அப்போதே பழுது பார்ப்பவர் பாதம் பணிவேன். எந்நாளும். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்’ என்று உருக்கமாகப் பாடினான் இப்பாண்டியன்.

“ஆராயினும் இந்தத் தென்காசி

மேவும்பொன் ஆலயத்து வாராத தோர்குற்றம் வந்தால்;அப்

போதங்கு வந்து.அதனை நேராக வேஒழித் துப்புரப் பார்களை நீதியுடன் பாரார் அறியப் பணிந்தேன்

பராக்ரம பாண்டியனே.”

என்பது கல்லிற் கண்ட கவி.

இப் பாண்டியனது ஆர்வத்தை உடனிருந்து அறிந்த தம்பியாகிய குலசேகர பாண்டியன் நாடாளும் உரிமை பெற்ற போது குறையாக நின்ற கோபுரத்தைக் கட்டி முடித்தான். ஒன்பது தட்டுகளை உடையதாய் உயர்ந்து ஓங்கி நின்று தென்காசி நகருக்கு ஒரு நல்லணியாய் விளங்கிய அக் கோபுரம் பிற்காலத்தில் தீப்பிடித்து வெடித்தது. இப்போது இடிந்து தலைபிளந்து நிற்கும் அதன் தோற்றத்தையும், பாண்டியன் பாடியுள்ள உருக்கமான பாட்டையும் பார்த்தால் நெஞ்சம் பொறுக்குதில்லையே !

தென்காசிப் பெருங் கோயில் கட்டிய பாண்டியன், அத னருகே அகரம் என்னும் பெயரால் ஐந்து ஊர்களையும் அமைத்தான் என்பது கல்லெழுத்தால் விளங்குகிறது. அவற்றுள் ஒன்று மேலகரம். தென்காசிக்கும் திருக்குற்றா