பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்காசி j90

வண்ணமாக வளைத்து நெற்றியிலே பொட்டிட நிற்கின்றாள் அப்பூவை.

“இருண்ட மேகம்சுற்றிச் சுருண்டு

சுழிஎறியும் கொண்டையாள் - குழை ஏறியாடி நெஞ்சைச் சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூமுருக்கின் அரும்பு

போலிருக்கும் இதழின்ாள் - வரிச் சிலையைப் போல்வளைந்து பிறையைப் போல்இலங்கும் நுதலினாள்”

என்று குற்றாலக் குறவஞ்சிக் கவிஞர் எழுதிய சொல் ஒவியம் அக்கல் ஒவியத்தை தழுவி எழுந்ததாகத் தோன்றுகின்றது.

ஆங்கில நாட்டுக் கம்பெனியார் இங்கு அரசாண்ட காலத்தில் காசா மேசர் என்பவர் தென்காசி நாட்டில் ஒரு வர்த்தக கர்த்தராக நியமிக்கப்பட்டார். அவர் தென்காசி நகரின் அருகே ஒரு குடியிருப்பு அமைத்து, திருக்குற்றால மலையிலே தோட்டப் பயிர் செய்யத் தொடங்கினார். தெற்கு மலைத் தோட்டம் முதலிய பத்துத் தோட்டங்களை உருவாக்கியவர் அவரே. அம்மலையில் இருபெரும் பாறைகள் குடை போற் கவிந்துள்ள இடத்தில் இயற்கையாக அமைந்திருக்கின்றது ஒரு குகை. அக் குகையிலே ஒரு முனிவர் நெடுங்காலம் இருந்து தவம் புரிந்தார். அது கண்ட பொது மக்கள் பரதேசிக் குகை என்று அதற்குப் பெயர் இட்டனர். பதினைந்து பழைய எழுத்துகள் இன்றும் அங்கே காணப்படுகின்றன. அவற்றை ஆராய்ந்து அறிந்தால் அக்குகையைப்பற்றிய குறிப்புகள் கிடைத்தல் கூடும்.

பரதேசிக் குகை’ யைச் சுற்றி ஒரு தோட்டம் வகுத்தார் காசாமேசர். நாட்டு மக்கள் அதற்குப் பரதேசித் தோட்டம்’ என்று பெயரிட்டார்கள். காசாமேசர் அதனைச் சற்றே